என்னது! ஹெல்மெட் இல்லாமல் பயணித்தாலும் காவல்துறையால ஒன்னும் பண்ண முடியாதா? எப்படி….. தெரிஞ்சுக்கலாமா…..
முதல்ல ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும். எண் சான் உடம்புக்கு சிரசே பிரதானம் அப்படின்றதால இருசக்கர வாகனங்கள்ல பயணிக்கிறப்ப கட்டாயம் ஹெல்மெட் போட்டுக்கணும் . ஆனா ஹெல்மெட் போடாம பயணிக்க சிலருக்கு இந்தியா முழுக்க அனுமதி இருக்குது தெரியுமா! அது யாருக்கு….
சீக்கிய மதத்தை பின்பற்றவங்களுக்கு தலைப்பாகை மிகவும் முக்கியம். தலைப்பாகை இல்லாம அவங்க வெளியில போக மாட்டாங்க. தலைப்பாகை இருக்கும் போது ஹெல்மெட் போட முடியாது. இதனால சீக்கிய மதத்தை சேர்ந்தவங்களுக்கு ஹெல்மெட் போட்டுட்டு போகணும் அப்படின்னு கட்டுப்பாடு கிடையாது. அவங்கள நிறுத்தி போக்குவரத்து போலீசாரால அபராதமும் விதிக்க முடியாது.
சரி அவங்க வடநாட்டவர் தானே! தமிழ்நாட்டுல அப்படிப்பட்ட விதிவிலக்கு யாருக்காச்சும் இருக்கானு தானே யோசிக்கிறீங்க+ ஆமாங்க. இருக்கு. தமிழகத்தை பொறுத்தவரை மெய்வழி சபா மற்றும் மெய் வழி சாலை என்ற மார்க்கத்தை பின்பற்றவங்க அதிகம் பேர் இருக்காங்க . கடந்த 2007 ஆம் ஆண்டு இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டிருக்கு.
இவங்கள தவிர மத்த அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்
அதே நேரம் மருத்துவ காரணங்களுக்காக ஹெல்மெட் அணியாமல் போறவங்கள காவல்துறையினால எதுவும் செய்ய முடியாது. ஆனால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் போது உடல்நலம் தொடர்பான முறையான ஆவணங்களை வைத்திருந்தால் மட்டுமே அபராதத்திலிருந்து தப்பிக்க முடியும்.