சேலம் மாவட்டத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளில் ஒன்று ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலை. இந்த சாலையில் சீலநாயக்கன்பட்டி அருகே மாணவர்கள் சிலர் ஸ்கேட்டிங் பயிற்சிகளில் ஈடுபட்டனர்.
வாகனங்கள் அதிகம் சென்று வரும் இந்த நான்கு வழி சாலையில் ஆபத்தை உணராமல் மாணவர்கள் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டதை அவ்வழியே சென்ற பலர் கண்டித்தனர். சிலர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர் .
இதனால் பயிற்சியாளருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்த நிலையில், ஸ்கேட்டிங் பயிற்சி அளித்த தனியார் நிறுவன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஸ்கேட்டிங் செய்த மாணவர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு நெடுஞ்சாலைகளில் ஸ்கேட்டிங் பயிற்சிகளில் ஈடுபடும் போது நிகழும் விபரீதங்கள் குறித்து காவல்துறை தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டது.
பிள்ளைகள் எதிர்காலம் கருதி பெற்றோர் பல பயிற்சிகளில் அவர்களை சேர்ப்பிப்பது நல்லது தான் என்றாலும் அதனை வழங்கும் நிறுவனங்கள் குறித்து நன்கு தெரிந்த பின் சேர்ப்பது நல்லது.