வெஸ்ட்நைல் அறிகுறிகள் … உயிர்ச்சேதம் ஏற்படுத்துமா? பரவலை தடுக்க முடியுமா?

தமிழகத்திற்கு எந்த ஒரு வியாதி வந்தாலும் பொதுவாக அது அண்டை மாநிலங்களில் இருந்து வருவதாகவே காலம் காலமாய் இருந்து வருகிறது.

சில தினங்களுக்கு முன் பறவை காய்ச்சல் கேரளாவில் இருந்து வந்தபோது சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் கோழி பண்ணைகள் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டன. இந்த பிரச்சனை மறைவதற்குள் அடுத்து வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் என்ற அடுத்த அதிர்ச்சி வந்து இறங்கியுள்ளது.

ஆப்பிரிக்காவின் உகாண்டாவில் 1937 ஆம் ஆண்டு முதன் முதலில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதால் வெஸ்ட் நைட் வைரஸ் என்ற பெயர் வைக்கப்பட்டது. க்யூலக்ஸ் வகை கொசுக்கள் தான் இந்த பரவலுக்கு முக்கிய காரணம். மனிதர்களை இந்த வகை கொசுக்கள் கடிக்கும் போது தொற்று பரவுகிறது .

தொற்று பாதித்தவர் ரத்தம் வழங்கும் போதும், உறுப்பு தானம் வழங்கும்போதும் மற்றவர்களுக்கும் இது பரவும் .தொற்று ஏற்பட்டதிலிருந்து ஆறு முதல் 14 நாட்களுக்கு இதன் அறிகுறிகள் தென்படும்.

அதீத தலைவலி மற்றும் காய்ச்சல் ,உடல் சோர்வு, பின் கழுத்து பகுதியில் தசைப்பிடிப்பு, பக்கவாதம் ஏற்படுதல் உள்ளிட்டவை இதன் அறிகுறிகள் . இவற்றில் ஏதேனும் ஒன்று தென்பட்டாலும் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும் . குறிப்பாக முதியோர், நீரழிவு நோயாளிகள் ,எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். எனினும் குறைந்தவர்கள் 80 சதவீதத்தினருக்கை எந்தவித அறிகுறியும் இல்லாத தொற்றாகவே இது இருக்கும் .

வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால் பயப்பட வேண்டாம். பெரும்பாலானோருக்கு விரைவில் காய்ச்சல் குணமாகிவிடும். ஒரு சதவீதத்தினருக்கும் குறைவாகவே மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதித்து தீவிர நோய் நிலையை உண்டாக்கும்.

தற்போது கேரளாவில் தென்பட்டுள்ள இந்த காய்ச்சல் தமிழகத்திற்கு பரவாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது . மாநில எல்லை சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

வருமுன் காப்போம் என்பது போல் கொசு மூலம் பரவும் காய்ச்சல் என்பதால் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்போம், கொசுக்கடியில் இருந்து பாதுகாத்துக் கொள்வோம் ,நோய் தொற்று வராமல் தவிர்த்திடுவோம்.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்