அனைவருக்கும் இனிய ரம்ஜான் தின நல்வாழ்த்துகள்
இஸ்லாமியர்களின் புனித மாதமாக போற்றப்படும் ரமலான் மாதம் இஸ்லாம் நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதம் . இந்த மாதம் முழுவதும் நோன்பு கடைப்பிடித்தும், திருக்குர்ஆன் ஓதியும், தானங்கள் செய்வதும், இஸ்லாமியர்கள் வழக்கம். ரமலான் நோன்பு முடிவடைந்த நிலையில் அதன் நிறைவாக இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
உலக மக்களுக்கு போதனைகளை வழங்கக்கூடிய திருக்குரானை வானவர் தூதர் ஜிப்ரில் அவர்கள் மூலமாக இறுதி தூதர் முஹம்மது நபி அவர்களுக்கு இறை தூதராக இறைவன் அருள துவங்கிய அருள் நிறைந்த மாதமாக ரமலான் கருதப்படுகிறது .
சுய ஒழுக்கம் , கட்டுப்பாடு ஏழைகளுக்கு உதவுவது, இறைவழிபாட்டில் ஈடுபடுவது, திருக்குர்ஆன் ஓதுவது, பொறுமையை கடைப்பிடிப்பது, குரானில் சொல்லப்பட்ட நெறிகளின் படி நடப்பது, இவையெல்லாம் ரமலான் நோன்பு கடைப்பிடிப்பதன் நோக்கமாகும்
இம்மாதம் முழுவதும் சூரிய உதயம் தொடங்கி அஸ்தமனம் வரை உணவு ,தண்ணீர், எதுவும் எடுத்துக் கொள்ளாமல் ,தொழுகை, இறை சிந்தனை, மற்றவர்களுக்கு உதவுதலை முக்கிய கடமையாக இஸ்லாமியர்கள் கொண்டிருப்பார்கள். அதே நேரம் சுகபோகங்களை தவிர்த்தல் , உணவு, தண்ணீர் ,புகைபிடித்தல் போன்றவற்றை அறவே அண்ட மாட்டார்கள்.
நோன்பு முடியும் மாலையில் அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவிற்கு இப்தார் என்று பெயர் பக்தி மார்க்கத்தை கடந்து அறிவியல் ரீதியாகவும் ரமலான் நோன்பு சிறந்ததாக கருதப்படுகிறது
அதற்கான காரணங்களாக விரதம் இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுதல், தேவையற்ற கொழுப்புகள் குறைதல், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருத்தல், மூளையின் செயல் திறனை அதிகரிக்கும் வகையில் புதிய செல்கள் உற்பத்தியாதல், மன அழுத்தம் போன்றவை வராமல் தடுத்தல் இவையெல்லாம் அறிவியலாளர் முன்வைக்கும் காரணங்கள் .
இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்பதையே எல்லா மதங்களின் கோட்பாடுகளும் எடுத்துரைக்கிறது . அந்த வகையில் இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான இந்த ரமலான் நோன்பும் அதையே வலியுறுத்துகிறது .
நம்ம சேலம் சார்பாக அனைவருக்கும் இனிய ரம்ஜான் தின நல்வாழ்த்துகள் .