2024 ஆம் ஆண்டின் இதுவரை தமிழ் சினிமாவிற்கு போறாத காலம் என்றே சொல்லலாம். சுமார் 100 திரைப்படங்கள் வெளியாகியும் மாஸ் ஹிட் என்று சொல்லக் கூடிய திரைப்படங்கள் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம்.
வசூலிலும் 100 கோடியை தொட்ட படம் என்றால் அது ஒரே திரைப்படம் தான் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
தேர்வுகள், தேர்தல், ஐபிஎல் என மக்களை ஆக்கிரமித்த பல விஷயங்களால் திரையரங்குகள் கடந்த இரண்டு மாதங்களாக வெறிச்சோடின. இனியாவது மக்கள் திரையரங்குகளுக்கு படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
ஆனால் அதற்கேற்றார் போல் திரைப்படங்கள் வரவேண்டியது அவசியம். முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒவ்வொன்றாய் வர இருப்பது இதற்கு உதாரணம்
இந்த ஆண்டில் மட்டும் மலையாள சினிமா 200 கோடிக்கு மேலும், தெலுங்கு சினிமா 300 கோடிக்கு மேலும் வசூல் ஆகியுள்ளது . அவர்களை கடந்து தமிழ் சினிமா 500 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது பலமான கதைகளைக் கொண்ட திரைப்படங்களால் மட்டுமே முடியும். அது நடக்குமா?
பொறுத்திருந்து பார்ப்போம்.