ஒரு தலை ராகம். என்பதுகளில் இருந்த இளைஞர்களுக்கு இந்தப் படத்தின் பாடல்கள்தான் உயிர். திரையரங்குகளிலோ கூட்டமோ கூட்டம் ! யார் இயக்கியது இந்த படத்தை? அறிமுக இயக்குனர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் அவர்களின் முதல் படம் தான். அந்த வகையில் மயிலாடுதுறையை சேர்ந்த ராஜேந்திரன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான முதல் படம் தான் இது.
இந்த படத்திற்கு மயிலாடுதுறையே தலைவணங்கியது, காரணம் எந்த இயக்குனரும் செய்யாத வகையில் தன் முதல் படத்தை தனது சொந்த ஊரிலேயே எடுத்ததுதான். நிஜ வாழ்க்கையில் தனக்கு நடந்த அனுபவத்தையே படமாக எடுத்ததும் மற்றொரு காரணம்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஜேந்தர் இயக்கிய அடுத்த படம் வசந்த அழைப்புகள் . இது அவ்வளவாக வெற்றியடையவில்லை என்ற போதும் அதில் நடித்த உஷாவை காதலித்து கரம் பிடித்தார் டி ஆர்.
மூன்றாவதாக வெளிவந்த ரயில் பயணங்களில் திரைப்படத்தை இப்போதும் விரும்பிப் பார்ப்போம் ஏராளம். இதன் பாடல்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு டி ஆர்- ஐ இசை ஜாம்பவானாக மாற்றியது இதற்குப் பின் டி ராஜேந்தருக்கு ஏறு முகம் தான்.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவரின் படங்கள் விநியோகஸ்தர்களுக்கு பணம் கொட்டும் மரமாக இருந்தது. தன் மனைவியின் சிறந்த நிர்வாக திறமையால் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்பட்டு கொண்டிருந்த டி ஆர் கோடீஸ்வரராக மாறினார்.
பல்துறை வித்தகரான அவருக்கு அஷ்டவதானி என்ற பெயரும் வந்தது. திரைப்படங்கள் பல இருந்தாலும் அரசியலில் கால் பதித்தும் அவர் ஓரளவு வெற்றி பெற்றார்.
தோல்விகளால் சோர்ந்திருந்த திமுக தொண்டர்களை தனது மேடைப் பேச்சால் உற்சாகம் அடையச் செய்தார். கட்சிக்காக அவர் இயற்றி இசையமைத்த பாடல்கள் பலவும் இன்றும் பிரபலமானவை.
ஓரிடத்தில் இல்லாமல் திமுக அதிமுக தனிக்கட்சி , பின்னாளில் அதை திமுகவோடு இணைத்தது, அதன்பின் மீண்டும் வெளிவந்து தனிக்கட்சி என பல முயற்சி கண்டும் எதிர்பார்த்த நிலையை அரசியலில் அவர் அடையவில்லை.
சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் அவர் அஷ்டவதானிதான். சினிமாவை கடந்து அரசியல், பத்திரிகை, குறள் என பன்முகத்தன்மையில் மிளிர்ந்தார் டி ஆர்.
வீராசாமி என்ற தோல்வியோடு திரைத்துரைக்கும் ஏறக்குறைய முழுக்கு போட்டார் டி.ராஜேந்தர்.
இன்றும் அடுக்கு மொழி பேச்சத்தான் அவருக்கு அழகு. கட்சிகளைக் கடந்து எல்லோராலும் தனது பேச்சால் கவர் பவர் .
எந்த ஒரு கேள்விக்கும் யோசிக்காமல் உடனுக்குடன் அடுக்கு மொழியில் பதிலளித்து அசத்திவிடுவார். இவரது இடத்தைப் இப்போதுவரை யாராலும் பிடிக்க இயலவில்லை.