மாணவர்களின் பிரச்சனைக்கு தீர்வு…

இரண்டு ஆண்டுகளாக பேருந்துகள் இன்றி சிரமப்பட்ட மாணவர்களின் பிரச்சனைக்கு தீர்வு

சங்ககிரியை அடுத்த வடுகப்பட்டி கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.

முதலமைச்சரின் பசுமை மிஷன் திட்டத்தில் முதலிடம் பெற்ற பள்ளியாகவும், மாவட்ட அளவில் கடந்த ஆண்டுக்கான சிறந்த பள்ளி மேலாண்மை குழுவுக்கான விருதுநையும் இப்பள்ளி பெற்றுள்ளது.

எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொட்டிபாளையம், மயில் புறா காடு, தாதவராயன் குட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இப்பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்களுக்கு நேரத்திற்கு பேருந்து வசதிகள் இல்லை. இதனால் பெற்றவரே மாற்று வழிகளில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இது குறித்த தகவல் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு சென்றது. அதன்பேயரில் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசிய ஆட்சியர் , மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர ஏதுவாக அந்த பகுதியில் போக்குவரத்து தொடங்க வழிவகை செய்யுமாறு உத்தரவிட்டார் . இதையடுத்து பேருந்து வசதி தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்