மாசு அப்படீன்னா தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இல்ல …

அப்ப “மாசு”ன்னா என்ன…

நான் சொல்லறத கீழே படிங்க … தெரியும்


நமக்கு தேவையான அனைத்தும் இந்த பூமியிலிருந்து தான் கிடைக்கிறது. நாம் உண்ணும் உணவு முதற் கொண்டு கழிக்கும் மலம் வரை இந்த பூமியில்தான் நடக்கிறது. ஆக்கவேலைகளுக்கு மட்டுமல்ல உலக உயிரினங்களையே மிரட்டிக்கொண்டிருக்கும் அழிவு வேலைகளுக்கும் அதற்கு பயன்படும் உபகரணங்கள் தயாரிக்கப்பயன்படும் பொருள்களை கொடுப்பதும் நாம் வாழும் இந்த பூமிதான். அந்த நச்சுப்பொருள்கள்தான் இப்பொழுது இந்த பூமியின் சுற்றுச்சூழலை அழித்துக்கொண்டு இருக்கிறது.


இதிலிருந்து இந்த பூமிப்பந்தை நாம் எப்படி காப்பாற்றப்போகிறோம் என்பதுதான் நம் முன் இருக்கும் தலையாய கேள்வி.


நாம் வாழ அனைத்தையும் கொடுத்த இந்த பூமிபந்தை பாதுகாத்து நமது அடுத்த தலைமுறைக்கும் கொடுக்கவேண்டாமா…?


எப்படி கொடுப்பது…?


அதற்கு நாம் செய்யவேண்டிய முதல் கடமை நமது சுற்றுப்புறத்தை அசுத்தம் இல்லாம துய்மையாக வைத்திருப்பதுதான்.
அதற்கு முதல்ல மாசுனா என்னன்னு பார்ப்போம்.


மாசுன்னா நிலத்திலயேயும் நீர்லயேயும் ஏற்படற நில மாசு, நீர் மாசு மட்டும் இல்ல இன்னொன்னும் இருக்கு.

அதுக்கும் முன்னால நில மாசுனா என்னன்னு பார்ப்போம்.


நில மாசு அப்படீன்னா…
நமக்கு இந்த பூமி எவ்வளவு அவசியமோ அதே அளவு அவசியம் நம்ம சக உயிர்களான பறவைகள், தாவரங்கள், விலங்குகளுக்கும் இந்த நிலப்பரப்புல வாழ்வது அவசியம். பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை நிலத்தில போட்டு புதைக்கிறது, நாம் தயாரிக்கிற ரசாயன பொருட்களிள் இருந்து வெளியேரும் ரசாயன கழிவுகள்னாலும் இந்த நிலத்திலே விஷம் கலக்குது.
அதோடுக்கூட நம்ம காய்கறிகள்ல கலக்கிற யூரியா, பூச்சிக்கொல்லிகள் போன்ற செயற்கை உரங்கள் நிலத்தின் தன்மையை மாசுபடுத்துது. அதோடு அத சாப்பிடற நமக்கும் பல நோய்கள் உருவாகுது. அதனால நாம நம்ம சுற்றி நடக்கிற இதுப்போன்ற செயல்களை தடுக்கனும். அப்படி இல்லன்னா இவைகளை நாம புறக்கணிப்பு செய்யணும்.

அடுத்து நீர் மாசு

அதற்கும் முன்னால நீங்க ஒன்னு தெரிந்துக்கொள்ளனும்
நீர் மாசுபடுவதற்க்கு முக்கிய காரணங்களில் ஒன்று அதன சேமிச்சு வைக்க சரியான வசதி இல்லாதது மட்டுமல்ல தொழிற்சாலை, மருத்துவமனை கழிவுகள் மற்றும் வீட்டு கழிவுகள் எல்லாம் குளம், குட்டை, ஏரி போன்ற நீர் நிலைகளில் கலக்கிறது, விவசாய நீரில் கிருமி நாசினிகளை பயன்படுத்துவது போன்ற காரணங்களால நீர் மாசு படுது.

இன்னொறு மாசு என்ன தெரியுமா…

அதுதான் ஒலி மாசு. இந்த மாசு எப்படி நடக்குதுன்னா பெரும்பாலான மனிதர்கள் பயன்படுத்தும் வாகனங்கள், பேருந்து, தொழிற்சாலை, சாலைகளில் பயன்படுத்தப்படும் ஒலி பெருக்கிகள், வீட்ல உபயோகப்படுத்துற இயந்திரங்கள், பொழுதுபோக்கு இயந்திரங்கள் நாம பேசும்போது எழுப்புற ஒலின்னு இந்த பூமி பலப்பல ஒலிகளால் மாசு அடைந்து இருக்கு.

இந்தியாவுல நோய் பெருகுவதற்கு முக்கியமான காரணம் காற்று மாசுபாடுதான்னு சொல்றாங்க

அதென்ன காற்று மாசுபாடு… அப்படீன்னா என்ன…

நாம பயன்படுத்துற வாகனத்திலிருந்து வெளியேர்ற புகை..

டீசல் மின் உற்பத்திசாலைகள்ள இருந்து வர்ற புகை..

தொழிற்சாலைக் கழிவுகள்..

நகராட்சி கழிவுகளை திறந்த இடத்துல எரிப்பது..

 பட்டாசு வெடிப்பதானால ஏற்படும் நச்சுப்புகை..

இப்படி ஏராளமா சொல்லிகிட்டே போலாம்


இதையெல்லாம் நாம செய்யாம குறைச்சுகிட்டாலே நாம நம்ம பங்குக்கு பூமியை பாதுகாக்கலாம்…
.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்