ஏற்காட்டில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலுமாக தடை
ஏற்காடு மலைப் பகுதியில் சுற்றுச்சூழல், சுகாதாரத்தை மேம்படுத்தவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டினை தவிர்க்கவும், மாற்றுப் பொருட்களின் பயன்பாட்டினை அதிகரிக்கவும், திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி பசுமை ஏற்காடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் படி திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்கள், உணவு விடுதிகளில் உருவாகும் குப்பைகளை மேலாண்மை செய்வது, ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளின் பயன்பாடுகளை முற்றிலும் தடை செய்வது, அதற்கான மாற்றுப் பொருட்களான மஞ்சப்பை உள்ளிட்டவைகளின் பயன்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த முயற்சிகள் வெற்றி பெறவும், ஏற்காட்டினை பசுமையாக பாதுகாக்கவும், சுற்றுலாப் பயணிகள், தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் மற்றும் இதர கடை உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.