கைத்தறித் தொழிலை நசுக்கும் பணிகளில் கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள்- நெசவாளர்கள் வேதனை.
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி, இளம்பிள்ளை, இடங்கணசாலை உள்ளிட்ட இடங்களில் கைத்தறிக்கு என ஒதுக்கப்பட்ட பட்டு ரகத்தினை விசைத்தறையில் நெய்து வருவதால் கைத்தறி தொழில் அழிந்து வருகிறது. மேலும் இதனை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. அது மட்டும் இன்றி விசைத்தறியில் நெய்யும் சேலைகளை கைத்தறையில் நெய்ததாக கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் உடந்தையுடன் சேலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தரமற்ற பட்டு ஜரிகை கொண்டு செய்த சேலைகள் ஒரிஜினல் சேலைகள் என்று கூறி பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது . இதனை கண்காணிப்பதற்காக உள்ள அதிகாரிகள் தங்களின் செலவிற்கு வழி கிடைத்ததும் கைத்தறி நெசவாளர்கள் நிலை குறித்து கவலைப்படாமல் சென்று விடுகின்றனர்.
இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, கைத்தறியில் நெய்யப்பட வேண்டிய சேலைகளை விசைத்தறிக்கு அனுப்பாமல் இருந்தால் போதும். அதிகாரிகளின் இந்த முறைகேடுகளை முடிவுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகமும் அரசும் உடனடியாக தலையிட்டு தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.