தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கம் . .. கட்டுப்படுத்த தவறுகிறதா தமிழக அரசு?

வலி நிவாரண மாத்திரைகளை போதை மருந்தாக பயன்படுத்திய விவகாரத்தில் சேலத்தில் மட்டுமே இரு தினங்களுக்கு முன்பு வரை 12 பேரும் நேற்று ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் போதை மருந்து புழக்கங்கள் அதிகரித்து வருவதையே இது காட்டுவதாக உணர்த்துகிறது.

இந்த நிலையில் இன்று தலைநகர் சென்னையில் மைய பேருந்து நிலையம் ஆன கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதை பொருள் சிக்கி இருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மெத்தபெட்டமைன் என்ற அந்த போதைப் பொருளை கைப்பற்றிய போலீசார் பிடிபட்ட 2பேர் அளித்த தகவலின் அடிப்படையில் குடோனில் பதிக்க வைக்கப்பட்டிருந்த 70 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கண்டுபிடித்துள்ளனர்.

போதைப் பொருள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டு வந்தாலும், தொடர்ந்து அவை பிடிபடும் சம்பவங்களால் அரசின் வார்த்தைகள் உண்மை அற்றவை என்பதையே எடுத்துரைக்கிறது.

மொத்தம் 6.2 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இவை எங்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தன என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் தலைநகராக இருக்கும் சென்னை தற்போது போதை மருந்துகளுக்கும் தலைநகராக மாறுகிறதா என்பதையே இந்த பறிமுதல் சம்பவம் எடுத்துரைக்கிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப் பொருட்கள் பறிமுதல் ஆகி வருவது போதை மருந்துக்கு இளம் தலைமுறை அடிமையாக அடிமையாகி இருப்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

வருங்கால சமுதாயம் போதையின் பிடியில் சிக்குவதை பார்த்துக் கொண்டிருக்கிறார்களா? அல்லது போதையில்லாத சமுதாயத்தை உருவாக்கிட முனைந்து கொண்டிருக்கிறார்களா! என்பது ஆட்சியாளர்களுக்குத்தான் வெளிச்சம்.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்