காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 99 ஆவது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கடந்த ஆண்டு போதுமான தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில் தற்போது கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பதால் காவிரியில் நீர் திறக்க வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடகம், அணைகளுக்கு வரும் நீரின் அளவு 28% குறைவாகவே உள்ளது. இதனால் நீர் திறப்பது தொடர்பான எந்தவித முடிவாக இருந்தாலும் அதனை இம் மாதம் 25ஆம் தேதிக்கு பிறகு அறிவிக்க வேண்டும் என தெரிவித்தது.
கூட்டத்தின் முடிவில் இன்று முதல் வரும் 31 ஆம் தேதி வரை தினமும் தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டது. தமிழக எல்லையான பிலிகுண்டுவிற்கு வரும் நீரின் அளவு ஒரு டிஎம் சியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.