டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

நிரம்பிய மேட்டூர் அணை… காவிரியில் லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறப்பு…. டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

கர்நாடக அணைகளில் திறந்துவிட்ட உபரி நீரால் காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்து 43 வது முறையாக 120 அடி என்ற முழு கொள்ளளவை மேட்டூர் அணை எட்டியது. அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு நிலவரப்படி கர்நாடக அணைகளில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் காவிரி கரையோரம் உள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகங்கள் தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்