செப்டம்பர் மாதம் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாக 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அடுத்தபடியாக நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில் அடுத்த மாதம் முதல் , 2026 மார்ச் வரையிலான 16 மாதங்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் சாதிவாரி கணக்கெடுப்பு சேர்த்து நடத்த இருப்பதாகவும் இதற்கென மக்கள் தொகை வடிவத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலும் தாமதமானால் வேலைவாய்ப்பின்மை, பணவீக்க தரவுகள், புள்ளிவிபர ஆய்வுகள் ஆகியவை பாதிக்கப்படும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.