எந்த தனி நபரையோ அல்லது வேறு நிறுவனங்களையோ நம்பி இல்லாமல் நமக்கு வேண்டியவைகளை, நமது அன்றாட அவசியமான உணவு தேவைகள் முதற்க்கொண்டு நாம் வசிக்கும் வீடு கட்டுவதற்கு உண்டான பொருட்கள் வரை நாமே தயாரித்து, அதனை நாமே பூர்த்தி செய்துக்கொள்வதுதான் சுயசார்பு பொருளாதாரம் என்பது …
இதன் அடிப்படையில்தான் சேலம் மாவட்டம் மேற்கு தொகுதி முத்துநாயக்கன்பட்டியில் இயலாதவர்க்கு இயன்றதை சேய்வோம் எனும் முழக்கத்தோடு சேலம் மாவட்டத்தின் சமூக ஆர்வலரும் பிஜேபியின் தமிழ் மாநில விவசாய அணி செயலாளருமான ஆர்.பார்த்தசாரதி அவர்கள் 60 தினங்களே ஆன நாட்டு கோழிகளை 120க்கும் மேலான ஏழை குடும்பங்களுக்கு வழங்கி சுயசார்பு பொருளாதாரத்திற்கான திட்டத்தை துவக்கி வைத்தார்
உதவி தேடுவோரை நான் தேடுகிறேன் என்ற ஒற்றை வரியில் சேலம் மக்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ள ஆர். பார்த்தசாரதி அவர்கள் இல்லாத மக்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து அவர்களின் இன்னல்களை போக்கி வருகிறார். விழாவில் கட்டிட விபத்தில் தன் மகனை இழந்த ஒரு தாயாருக்கு உடனடியாக உதவிகரம் நீட்டியதோடு அவருக்கு வேண்டிய உதவிகளையும் செய்ய உறுதி அளித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு விடியல் அமைப்பு, திருநங்கையருக்கு தேவையான நலத்திட்ட உதவிகள், ஆலய திருப்பணிகள், வசதி குறைந்த பிள்ளைகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இயலாத, வயது முதிர்ந்தோருக்கும் தம்மால் ஆன உதவிகளை செய்து வருகிறார். இவரின் பொற்கரங்களால் அளிக்கப்பட்ட பலன்களை பெற்றோர் பார்த்தசாரதி அவர்களை நீடூழி வாழ வாழ்த்தி வருகின்றனர்.
உதவிகளை தொடர்ந்து, வாய்ப்பில்லாதவர்களுக்கு சிறு தொழில் தொடங்கி குறிப்பாக பெண்களுக்கு அவர்களது வறுமையை போக்கி அவர்கள் யார் தயவிலும் இல்லாமல் இந்த சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் எனும் உயரிய நோக்கத்துடன் சேலம் முத்துநாயக்கன்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அங்கு வசித்து வரும் ஏழைக் குடும்பங்களுக்கு 60 தினங்கலேயான பெருவிடை நாட்டுக்கோழிகளை குடும்பம் ஒன்றிற்கு ஐந்து கோழிகள் வீதம் 120க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஆர்.பார்த்தசாரதி அவர்கள் வழங்கினார்.
இவற்றைப் பெற்றுக் கொண்ட பயனாளர்கள் பார்த்தசாரதி அவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு ,கோழிகளை வளர்த்து அதன் மூலம் தங்களது வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
விழாவில் பேசிய பார்த்தசாரதி அவர்கள் அனைவருக்கும் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் குறிப்பாக பெண்கள் இந்த சமுதாயத்தில் யார் தயவும் இன்றி தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் இது போன்ற திட்டங்களை தாம் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் போது தங்களது பகுதியில் உள்ள குறைகள் குறித்தும் பார்த்தசாரதி அவர்களிடம் முத்துநாயக்கன்பட்டி ஏழை மக்கள் தெரிவித்தனர்.
அப்போது, தம்மால் இயன்ற வரையில் உதவிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக வும் சமூக சேவகர் ஆர் பார்த்தசாரதி அவர்கள் உறுதியளித்தார்.