உடலில் இரண்டு சிறுநீரகங்கள் இருந்தாலும் அவை பழுதடையும் போது கடுமையான நோய் அல்லது மரணத்தை ஏற்படுத்தும்.
இதனை எப்படி பாதுகாப்பது?
யூரியா போன்ற கழிவுப்பொருட்களை ரத்தத்தில் இருந்து பிரித்து நீருடன் சேர்த்து சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பே சிறுநீரகம். இதனை பாதுகாத்திட தினமும் குறைந்தது 3 லிட்டராவது தண்ணீரை குடிக்க வேண்டும். உணவில் உப்பின் அளவை குறைத்திட வேண்டும். உயர் ரத்த அழுத்தம், யூரிக் ஆசிட் பிரச்சனைகளுக்கு உணவில் உப்பை குறைப்பது அவசியம்.
அதிக அளவில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அசைவம் அதிகமானால் கொலஸ்ட்ரால் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல் , யூரிட் ஆசிட் அதிகம் ஆகுதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும் . சிறுநீரகம் பழுதானோரும் அசைவம் சாப்பிடக்கூடாது.
சிறுநீரகப் பிரச்சனைக்கு காரணம் இது என ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. உணவு பழக்கங்களை தாண்டி, மரபு காரணமாகவும், வயது காரணமாகவும் வருவதற்கு வாய்ப்பு உண்டு . உடல் பரிசோதனை , 50 வயதுக்கு மேல் ரத்தப் பரிசோதனை, பி எஸ் ஏ சோதனைகள் மூலமும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வதால் ஆரம்ப காலத்திலேயே ப்ராஸ்டேட் வீக்கத்தை கண்டுபிடித்து சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம்.
சிறுநீரகத்தை பாதுகாத்து உடலையும் பாதுகாத்திடுவோம்.