கிட்னி கல் கரைய ஜூஸ் குடிங்க…

பரங்கிக்காய், சுரைக்காய் போன்ற நீர்க்காய்களை சேர்த்து கொள்ள வேண்டும்.

முள்ளங்கியையும் ஜூஸ் போட்டு குடிக்கலாம். இவைகள் எல்லாம் சிறுநீர் பெருக்கிகளாக செயல்படுகின்றன.

சமையலில், வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாழைத்தண்டு பொரியல் அல்லது ஜூஸ் போல செய்து சாப்பிடலாம். கீரைகளில், அகத்திக்கீரையும், புதினாவும், துளசியும் சிறுநீரக கற்களை கரைக்க பெரிதும் துணைபுரிகின்றன..

பார்லி தண்ணீர்அதிக தண்ணீரை குடிக்க வேண்டும்.. குறைந்தது 8 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.. சிறு சிறு கற்களும் நொறுங்கி வெளியேற துணைபுரியும்.. பார்லி தண்ணீரை நிறைய குடிக்கலாம்.. பார்லியை நன்றாக வேகவைத்து, அந்த தண்ணீரை மட்டும் குடித்து வந்தால், அதிக சிறுநீர் வெளியேறும்.. அப்போது சிறுநீரகத்தில் உப்பு சேர்வதும் தடுக்கப்படும்..

சீமைக் காட்டுமுள்ளங்கியையும் பயன்படுத்தலாம். இது ஒரு ஆயுர்வேத மூலிகை. இதன் வேர்களிலிருந்து சாறு தயாரித்து குடித்தாலும், சிறுநீர் கற்கள் உடைத்துவிடும்..

அனைத்தையும்விட

வாழை மர சாறு மிகச்சிறந்த முறையில் கற்களை வெளியேற்ற தூண்டுகின்றன.. வாழை மரத்தை வெட்டி, அடிமரத்திலிருந்து இந்த சாறு எடுக்கப்படும். சிறுநீரக கற்கள் எளிதாக கரைய, இந்த சாறு போதுமானது.. வாழைத்தண்டு சாறுவிட இது பெஸ்ட்.

தவிர்க்க வேண்டிய ஜூஸ்கள்

சர்க்கரை, உப்பு, சிப்ஸ், பாப்கார்ன், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, பாதாம், பிஸ்தா, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, கூல்டிரிங்ஸ்கள், சாக்லேட், ஆல்கஹால் இவைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்