எந்த நேரமும் மேட்டூர் அணை நிரம்பும்…

மேட்டூர் அணை எந்த நேரமும் நிரம்பி உபரி நீர் முழுவதுமாக திறக்கப்படலாம் என்பதால் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பில் இன்று பகல் நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியை கடந்துள்ளது. அணைக்கான நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் இன்று எந்த நேரமும் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே திறந்து விடப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர் . சேலம் மாவட்டம் மட்டுமல்லாது காவேரி கரையோரம் உள்ள அனைத்து இடங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் படி மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்