ஊஞ்சல் ஆடலாம் வாரியளா…..

அந்த காலத்துல ஆலமரத்துல ஊஞ்சல் கட்டி ஆனந்தமா ஆடினாங்க. அதெல்லாம் இப்போ மறைஞ்சு போச்சு. ஏன் ஊஞ்சல் ஆடணும்? அதனால என்னென்ன நன்மைகள்? தெரிஞ்சுக்கலாமா…..

ஊஞ்சல் ஆடுறதால மனசுல இருக்குற எதிர்மறை எண்ணங்கள் மறைஞ்சி நேர்மறை எண்ணங்கள் தோன்றுது. திருமணங்கள்லயும் ஊஞ்சல் சடங்கு இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுது.

ஊஞ்சல் ஆடுறதால மனச்சோர்வு போய் உடல் உற்சாகம் பெறுது.

நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கிலிகளையும் பிடித்துக் கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத் தண்டுக்கு ரத்த ஓட்டம் பரவி மூளை சுறுசுறுப்பாகுது.

கணினியில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைஞ்சி போன இன்றைய இளசுகள், ஊஞ்சல் பயிற்சிகளை தினமும் செஞ்சா முதுகு தண்டுவடம் பலமாகி கழுத்து வலி குணமடையும்.

தோட்டத்துல ஊஞ்சல் ஆடுறவங்களுக்கு இதய நோய் கட்டுப்படும். சுத்தமான காற்று உள்ள போயி சீரான இயக்கத்துல இதயம் செயல்பட வழிவகுக்கும். உடம்புல ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்துக்கு ரத்தம் சீராக செல்லும்.

தினமும் மதியம் சாப்பிட்டதுக்கப்புறம் அரை மணி நேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். (ரயில்கள்ல பயணிக்கிறப்ப பெரும்பாலானவங்களுக்கு சாப்பிடற உணவு எளிதில் ஜீரணம் ஆகுறதுக்கு இது ஒரு காரணம்).

கோபம் தணிய ஊஞ்சல் ஆடலாம். வெளியில வேலைகளை முடிச்சிட்டு களைப்போட வீட்டுக்கு வர்றப்ப, ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை கொஞ்சம் மேலே உயர்த்தி இரு கைகளையும் ஊஞ்சல் பலகைல பதிய வைத்து ரிலாக்ஸாக ஆடினா களைப்பு பறந்திடும். உடலோட ஒவ்வொரு பகுதிக்கும் ஓய்வு கிடைச்சி நிம்மதி உண்டாகும்.

அந்த காலத்துல எல்லா வீடுகள்லயும் வரவேற்பறையில ஊஞ்சல் கட்டி வச்சிருப்பாங்க. சுப காரியங்களை பத்தி பேசுறப்ப ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுறதும் வழக்கமா இருந்துச்சு. இந்த காலத்துல வீடுகளோட அளவு குறைஞ்சிடுச்சு. ஊஞ்சலும் மொத்தமா காணாம போயிடுச்சு. மாற்று வடிவமா பலவித ஊஞ்சல்கள் வந்தாலும் அந்தக் கால ஊஞ்சல் போல இது இல்ல அப்படின்றது தான் உண்மை.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்