உணவு பாதுகாப்புக்கான தீர்வை இந்தியா கண்டுபிடித்துள்ளது-பிரதமர் மோடி பெருமிதம்…

உணவு பாதுகாப்புக்கான தீர்வை இந்தியா கண்டுபிடித்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்

தேசிய விவசாய அறிவியல் மையத்தின் 32வது விவசாய பொருளாதார நிபுணர்களின் சர்வதேச சங்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்தியாவில் 15 விவசாய பருவமண்டலங்களும், வெவ்வேறு விவசாய நடைமுறைகளும் இருப்பதாக அவர் கூறினார்.

இந்த பன்முகத்தன்மை தான், உலகத்தின் உணவு பாதுகாப்புக்கான நம்பிக்கைக் கதிராக இந்தியா திகழ்கிறது. பெரிய அளவில் பால், பருப்பு உற்பத்தி மூலம் இந்தியா உணவு உபரி நாடாக திகழ்கிறது. ஒரு காலத்தில் இந்தியாவின் உணவு பாதுகாப்பு சர்வதேச கவலையாக இருந்தது. இன்று உலகளாவிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுக்கான தீர்வை இந்தியா கண்டுபிடித்துள்ளது என்று பெருமிதத்துடன் பிரதமர் குறிப்பிட்டார்.

விவசாய பாரம்பரியத்தில் அறிவியலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், உணவை மருந்தாக எடுத்துக் கொள்ளும் ஆயுர்வேத அறிவியல் நம்மிடம் உள்ளதாகவும் கூறிய பிரதமர் , சிறுதானியங்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவதால் உலகளாவிய ஊட்டச்சத்து பிரச்னைக்கு அவை தீர்வாக இருப்பதாக தெரிவித்தார்.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்