ADHD பயமும் தெளிவும்…

திரையுலக செய்திகளை விரும்பி படிப்பவர்கள் பலருக்கும் நேற்றிலிருந்து குழப்பத்தில் ஆழ்ந்துள்ள செய்தி ஒன்று உண்டு. அது ADHD. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் பகத் ஃபாசில், தான் ADHD யால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ADHD என்றால் என்ன? விரிவாக பார்க்கலாம்.

தொழில் நுட்ப வளர்ச்சிகளில் பல முன்னேற்றங்களை அடைந்தாலும், நோய்களிலும் பலவித முன்னேற்றங்களை அடைந்து வருகிறோம். குழந்தை பிறந்தது முதல் வளர்பருவம் வரை பெயர் தெரியா குறைபாடுகள் பல அவர்களை பாதிக்கின்றன. அந்த வகையில் ஒன்றுதான் ADHD.

மூளை சார்ந்த மனநல பிரச்சனையான இதன் முழு பெயர் Attention Defisit Hyperactive Disorder என்பதாகும் .
கவனக்குறைபாடு, கவனச் சிதறல், ஹைப்பர் ஆக்டிவ், எளிதில் பதற்றம், உணர்ச்சி வசப்படுதல் இவையே இதன் அறிகுறிகள். இதனை சிறு வயதிலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்தலாம். இதனை நோய் என்று சொல்ல முடியாது. குறைபாடு என்பதுதான் சரி . இந்த குறைபாடுகள் உள்ளவர்கள் எப்போதும் துரு துருவென்று இருப்பார்கள். அதே நேரம் ஓரிடத்தில் அதிக நேரம் இருக்க மாட்டார்கள் . மேலும் ஞாபக சக்தியும் அவர்களுக்கு குறைவு. எதை எங்கே வைத்தோம் என்பதை மறந்து விடுவார்கள். படிப்பு தொழில் ஆகியவற்றிலும் சரியாக கவனம் செலுத்த இயலாது.

இந்த குறைபாட்டை தனது 41வது வயதில் கண்டுபிடித்துள்ளதால் பகத் ஃபாசிலுக்கு இதனை சரி செய்வது சற்று கடினம் தான் என்றாலும் கட்டுக்குள் வைத்திடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். இதனால் பாதிப்பு ஏதும் இல்லை என்பது அவரது ரசிகர்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தி. உலகெங்கிலும் சராசரியாக குழந்தைகளில் 8.4 சதவீதத்தினரும், பெரியவர்களில் 2.5 சதவீதத்தினரும் இந்த குறைபாட்டில் இருக்கின்றனர்.

பின்குறிப்பு: பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களும் இந்த ஞாபக மறதி குறைபாட்டில் இருந்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்