வெயில் ஆரம்பிச்சுடுச்சு, வீடுகள்ல மின் தேவையும் அதிகரிச்சுடுச்சு . ஏசி பயன்படுத்துவதும் கணிசமா உயர்ந்துட்டு வருது. இந்த ஏசிய சரியான விதத்தில் பயன்படுத்தினா உடல் பாதிப்புல இருந்தும், அதிக மின்சார நுகர்வுல இருந்தும் தப்பிக்கலாம்.
எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா?
பெரும்பாலும் 20 லிருந்து 22 டிகிரி வரை ஏசிக்கள் பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படும். நம்ம உடம்போட வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் . 23 டிகிரி லிருந்து 39 டிகிரி வரையிலான வெப்பநிலைய நம்ம உடம்பு எளிதாக பொறுத்துக்கும்.
ஏசி இருக்கிற அறையோட வெப்பநிலை, குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தா தும்மல், உடல் நடுக்கம் எல்லாம் ஏற்பட வாய்ப்பு இருக்கு.
18 லிருந்து 21 டிகிரி வரை ஏசிய இயக்குனா சாதாரண உடல் வெப்பநிலையை விட அறையோட வெப்பநிலை குறையும். இது உடம்போட ரத்த ஓட்டத்தை பாதிக்கும். இதனால் மூட்டு வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும் .
உடம்புல இருந்து வர்ற வியர்வை வராமல் போய் பின்னாள்ல தோல் அலர்ஜி , அரிப்பு உயர் ரத்த அழுத்தம் எல்லாம் வர்றத்துக்கான வாய்ப்புகள் அதிகம்.
அதிக ஸ்டார் ஏசியா இருந்தாலும் வெப்பநிலை குறையறதால மின்சார பயன்பாடு அதிகமாகும்.
21க்கு குறையாமல் ஏசி இருக்கக் கூடாது அப்படின்றத மறக்க கூடாது.
முடிஞ்சவரை 26 டிகிரிக்கு மேலயும் , ஃபேன குறைவான வேகத்துலயும் இயக்குவது தான் இதுக்கு சிறந்த தீர்வு. இதனால் மின்சார தேவையும் குறையும், உடல் வெப்பநிலையும் சீராருகும், உடம்புக்கும் பாதிப்பு இருக்காது. புவி வெப்பமடையறதும் குறையும்.
இதனால் 26 டிகிரிக்கு குறையாமல் ஏசிய பயன்படுத்தாமல் இருப்போம். பல நன்மைகளை பெறுவோம்.