நாடு முழுவதும் ரயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணம் செய்யும் நபர்களிடம் டிக்கெட் பரிசோதகர்கள் அபராதம் வசூலித்து வருகின்றனர். அதன்படி சேலம் கோட்டத்தில் கடந்த மாதம் டிக்கெட் இன்றி பயணித்த 10,340 பேருக்கு ரூ69.46 லட்சமும், உரிய முன்பதிவு டிக்கெட் இன்றி பயணித்த 7264 பேருக்கு ரூ34.02 லட்சமும், விதிமுறைகளை மீறி அதிக லக்கேஜ் எடுத்து சென்ற 39 பேருக்கு ரூ22 ஆயிரமும் என கடந்த மாதத்தில் மட்டும் 17,643 பேரிடம் இருந்து ரூ1.03 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.