பாஜக தீவிர உறுப்பினர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவிலான அடையாள அட்டை – மாநில பாஜக துணைத் தலைவர் கே பி ராமலிங்கம்

பாஜக தீவிர உறுப்பினர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவிலான அடையாள அட்டை வழங்கப்படும் என மாநில பாஜக துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 1ஆம் தேதி பாஜக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்க உள்ளது. இதயொட்டி மாவட்ட அளவிலான பயிலரங்க கூட்டமா சேலம் மரவனேரியில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் கேபி ராமலிங்கம், ஒரு வாக்குச்சாவடிக்கு குறைந்தது 200 வாக்காளர்களையாவது கட்சியில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்றார்.

50 புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகளுக்கு தீவிர உறுப்பினர் என அடையாளப்படுத்தப்பட்டு அவருக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் ஊழலற்ற, போதையற்ற, சுரண்டலற்ற, தர்மத்தின் ஆட்சி அமைய தொண்டர்கள், நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும், அப்போதுதான் பாஜக எனும் அறத்தின் ஆட்சி தமிழகத்தில் அமையும் என்றும் கே பி ராமலிங்கம் தெரிவித்தார்.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்