குழாய் பதிப்பதற்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான உரிய இழப்பீடு அறிவிக்க வேண்டும் – அண்ணாமலை

தமிழக அரசின் முடிவை ஏற்று தொடர் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் 60 ஆண்டு கால கனவான அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை உடனடியாக தொடங்க வலியுறுத்தி வரும் 20ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தமிழக பாஜக அறிவித்திருந்தது. மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் இதில் கலந்து கொள்ள இருந்தனர்.

இந்த நிலையில் பாஜகவின் அழுத்தத்திற்கு பணிந்து அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நாளை தொடங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனை வரவேற்றுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , தமிழக அரசின் முடிவினை ஏற்று வரும் 20ம் தேதி முதல் தொடங்க இருந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். குழாய் பதிப்பதற்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான உரிய இழப்பீடு குறித்து தொடக்க விழாவில் அறிவிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே 3மாவட்ட விவசாயிகளின் கனவான அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக தமிழக மாநில பாஜக விவசாய அணி செயலாளர் ஆர்.பார்த்தசாரதி தெரிவித்து உள்ளார்.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்