கட்டிட கட்டுமான திட்ட அனுமதி கட்டணம் – இரண்டு மடங்கு உயர்த்தியது திமுக அரசு

கட்டிட கட்டுமான திட்ட அனுமதி பெறுவதற்கான கட்டணங்களை இரண்டு மடங்காக உயர்த்தியது திமுக அரசு

சொத்து வரி உயர்வு, பதிவு கட்டண உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு போன்றவைகளால் ஏற்கனவே நடுத்தர மக்களின் வீடு வாங்கும் கனவில் தடைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது கட்டிட திட்ட அனுமதி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது அவர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கட்டுமான துறையினரின் கோரிக்கையை ஏற்று சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி வழங்கும் திட்டம் அண்மையில் தமிழக அரசால் துவங்கப்பட்டது. 2500 சதுர அடி வரையிலான மனையில் 3500 சதுர அடி வரையிலான வீடு கட்ட சுய சான்று அடிப்படையில் ஆன்லைன் வழியே உடனடி கட்டட அனுமதி வழங்கப்படும்.

இத் திட்டத்தில் கட்டிட அனுமதி வழங்க சென்னை தவிர்த்து சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் சதுர அடிக்கு 74 முதல் 88 ரூபாய் என்ற அளவில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதன்படி 3500 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டட அனுமதி கட்டணங்களாக தற்போது 8,900 சதுர அடி கட்டடத்திற்கு அனுமதி வாங்க நான்கரை லட்சம் ரூபாய் செலுத்தி வந்த நிலையில் இனி ஒன்பதரை லட்ச ரூபாய் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

புதிதாக கட்டட அனுமதி பெற இரண்டு மடங்கு கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதால் கட்டுமான துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முன்அறிவிப்பின்றி திடீரென உயர்த்தப்பட்ட இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்