அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டுமென தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து உள்ளார் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை.
ஏன் இந்ததிட்டத்தை நிறைவேற்ற வேண்டும்..? இதன் அவசியம் என்ன என்று பார்ப்போம்.
பவானிசாகர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை, வீணாக்காமல் ஈரோடு, திருப்பூர்,கோவை மாவட்டங்களில் உள்ள மிகவும் வறட்சியான பகுதிகளுக்கு
கொண்டுசென்று, அப்பகுதியின் குடிநீர் தேவைகளை பூர்த்திசெய்ய உருவாக்கப்பட்ட திட்டம்தான் அத்திக்கடவு- அவிநாசிதிட்டம்.
2019டிசம்பரில் தொடங்கப்பட்ட இதன்பணிகள், 27மாதங்களில் முடிக்கப்படும் என்றும், 2021ஏப்ரல்.27-ம் தேதிக்குள் திட்டம் நிறைவடையும் எனவும் கணிக்கப்பட்டது.
இந்ததிட்டமானது பவானி ஆற்றில் கட்டப்பட்டுள்ள காலிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து ஆண்டுக்கு1.50டி.எம்.சி உபரிநீரை நீரேற்று முறையில் பம்பிங் செய்து, நிலத்துக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள பெரிய சைஸ் குழாய்களின் மூலம் கொண்டு சென்று, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மொத்தம் 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில், இந்த திட்டம் தயாரிக்கப்ட்டு உள்ளது.
32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய குளங்கள் மற்றும் 921குட்டைகள் மற்றும் தடுப்பணைகள் என 1045 நீர்நிலைகள் பயன்பெறும் திட்டம்தான் இது
மொத்தம் 958கி.மீ நீளத்துக்கு குழாய்கள் பதிக்கப்பட்டு தற்போது அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் செல்லும் வகையில் 900-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தினால்,100-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் சோதனை ஓட்டம் நிறைவடையவில்லை.
6 குடிநீரேற்று நிலையங்களை கொண்ட இந்ததிட்டம், நிலத்தடி நீராதாரத்துக்கான முக்கியமான திட்டம் என்பதோடு, அப்பகுதி மக்களுக்கான குடிநீர், விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கான குடிநீர் உட்பட பல்வேறு நீராதாரத்தேவைகளை பூர்த்திசெய்கிறது என்பதுதான் இந்ததிட்டத்தின் மிக முக்கிய அம்சம்.
தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம் அறிவித்து உள்ள நிலையில், விரைவில் இந்த திட்டம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என 3 மாவட்ட மக்களும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
கோவை,திருப்பூர்,ஈரோடு ஆகிய 3மாவட்ட விவசாயிகளின் 75ஆண்டு கால நீண்ட கோரிக்கையான இத்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் குளம், குட்டைகள், ஏரிகளில் நீர் நிரம்பவும்,அதன் மூலம் குறிப்பிட்ட பாசனப்பகுதிகள் அதிகரிக்கும் எனவும் விவசாயிகளும் ஆவலாக உள்ளனர்.
நாமும் மிக ஆவலாக உள்ளோம்…….