தேசிய தர்பூசணி தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 3-ம் தேதி உலக தர்பூசணி நாளாகக் கொண்டாடப்படுகிறது. சீனாவில்தான் அதிக அளவில் தர்பூசணிகள் பயிரிடப்படுகிறது. இதுவரை 1200-க்கும் அதிகமான தர்பூசணி வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கோடைக்காலங்களில் அதிகம் விற்பனையாகும் பழங்களின் பட்டியலில் தர்பூசணி தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் அனைவரும் விரும்பி உண்ணுவர். குளிர்ச்சிக்காகவும் சுவைக்காகவும் சாப்பிடப்பட்டாலும் இவற்றில் அதிக அளவு இரும்புச்சத்து, வைட்டமின் சி, ஏ, பொட்டாசியம் மற்றும் 92% நார்ச்சத்தும் உள்ளன.

தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. தர்பூசணியில் சதைப்பகுதியில் உள்ள சத்தைவிட அதிகளவு சத்து வெண்ணிற அடிப்பகுதியில் உள்ளது. தர்பூசணியின் விதையும் உடலுக்கு மிகவும் நல்லது. புற்றுநோய் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் சக்தி தர்ப்பூசணிக்கு உண்டு.

ஆனால் தற்போது உள்ள தர்பூசணியில் செயற்கை முறையில் பழுக்க வைக்க ஊசிகள் செலுத்துவதால் சுவையற்றதாகவும், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் உள்ளது. இதனால் மக்களுக்கு தர்பூசணியின் மேல் உள்ள ஆர்வம் குறைந்துக் கொண்டே வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்