என்னது… இனிவரும் காலங்கள்ல வங்கி கிளார்க் பணியிடங்களுக்கு ஆபத்தா?

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கரன்சி மற்றும் நிதி அப்படின்ற தலைப்புல ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டு இருக்காரு. அதுல நிதித்துறை எதிர்நோக்கிக்கிட்டிருக்கிற சவால்களை பத்தி குறிப்பிட்டு இருக்காரு.

வங்கித் துறைகள்ள அவுட்சோர்சிங் மற்றும் தொலைவில் இருந்து பணியாற்றுவது டிஜிட்டல் பயமாக்கப்பட்டு வருவதாகவும், மூலதனம் மற்றும் பணியாளர் ஊதியத்துக்கு இடையேயான இடைவெளிய தானியங்கி முறை நிரப்பிட்டு இருக்கிறதாகவும் அவர் சொல்லி இருக்காரு.

இதனால குறைந்த திறனுக்கு குறைந்த ஊதியம் , அதிக திறனுக்கு அதிக ஊதியம் அப்படின்ற வேலைவாய்ப்பு முறை உருவாகிறதாகவும் அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சி நடுத்தர பணிகளை காணாமல் போக செய்யறதாகவும் சொல்லி இருக்காரு.

2010 – 11 நிதியாண்டுல 50 க்கு 50 அப்படின்ற விகிதத்தில் இருந்த தொழில்நுட்பம் மற்றும் பணியாளர் பங்களிப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 74 க்கு 26 அப்படின்னு மாறி இருக்கிறதா அந்த ஆய்வறிக்கையில் சக்தி காந்ததாஸ் சொல்லி இருக்காரு.

இதனோட பாதிப்பு வங்கிகள்ல கீழ்மட்ட பணியாளர்களோட எண்ணிக்கை குறைஞ்சி தொழில் நுட்ப பணியாளர்களோட எண்ணிக்கை அதிகரிச்சிட்டு இருக்கிறதாவும் சொல்றாரு . கடந்த ஆண்டு நிரப்பப்பட்ட வேலை வாய்ப்புகள்ல செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் பணியாளர்களோட பணியிடங்கள் மட்டும் 16 சதவீதம் . இதை சொல்லி தன்னோட ஆய்வறிக்கைய நிறைவு செஞ்சிருக்காரு சக்தி காந்ததாஸ்.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்