திமுக அரசின் அராஜக அத்துமீறலில் காவல்துறை இருப்பதாக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு…
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் அண்மைக்காலமாக தமிழகத்தில் ஜனநாயக போராட்டங்கள், ஊர்வலங்கள் தடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்தவற்றை அமலாக்கக்கோரி அணிதிரள்வோரை அடக்கி ஒடுக்க காவல்துறை முயல்வது நியாயமற்றது என்றும் அவர் கூறியுள்ளார். அண்மையில் சென்னையில் பேரணி நடத்துவதற்காக மாநிலம் முழுவதிலும் புறப்பட்ட இடத்திலேயே 15000 மருத்துவ ஊழியர்கள் கைது செய்ய ப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சிகளைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகளும் திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வருவது ஆளும் அரசின் நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.