ஒருவர் பலியான நிலையில் புழக்கத்தை கட்டுப்படுத்துமா மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும்?
சேலத்தில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த 12 பேரையும் அதன் முக்கிய குற்றவாளியான செல்வராஜை கோவையிலும் காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் போதை மருந்து பழக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஜபருல்லா போதை ஊசி பயன்படுத்தி உயிரிழந்துள்ள சம்பவம் போதை மருந்து பழக்கம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு முன்பாகவே இருந்திருந்தது தெரிய வந்தது. அவர் போதை ஊசி பயன்படுத்தியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து ஜபருல்லாவின் நண்பர் நபீத்தை கைது செய்துள்ள போலீசார், அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . சேலத்தில் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகள் கிடைப்பதை தடுக்கச் செய்துள்ளதாகவும், அடுத்த கட்டமாக போதை ஊசிக்கு அடிமையானவர்களை கண்டறிந்து அவர்களை போதை மறுவாழ்வு மையங்களில் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.