சேலம் மாரமங்கலத்துப்பட்டி சமுதாய நலக் கூடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கரம் கொடுக்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேசிய அளவில் பதக்கங்களை வென்ற சேலம் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் வேல்முருகன் (நீச்சல்), பார்த்திபன் (பேட்மின்டன்) கௌரவிக்கப்பட்டனர்.
பாஜக தமிழ்நாடு மாநில விவசாய அணி செயலாளரும், சமுக ஆர்வலருமான ஆர். பார்த்தசாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக மாரமங்கலத்துள்ளட்டி பஞ்சாயத்து தலைவர் கவியரசி, மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு சங்க தலைவர் குமார் , மக்களின் சேவகன் அறக்கட்டளை நிறுவனர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கரம் கொடுக்கும் விடியல் அமைப்பின் புதிய இலச்சினை (Logo) வெளியிடப்பட்டது.
வறுமையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப்பொருட்களும் வழங்கப்பட்டன. பொருட்களை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்தனர்.
விடியல் அமைப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டரீதியான நியாயமான உரிமைகள், சமூகத்தில் உரிய அங்கீகாரத்தை பெறச் செய்தல், அவர்களின் திறமைகளை ஊரறிய, உலகறியச் செய்ய தேவையான நடவடிக்கைகள், மத்திய மாநில அரசுகளின் திட்ட பலன்கள் ஆகியவைகளை கிடைக்கச்செய்ய ஒரு பாலமாக அமையும் என்று சமூக சேவகர் ஆர்.பார்த்தசாரதி தெரிவித்தார்.