இன்றைய அவசர உலகில் நாம் நம்மை பற்றி சிந்திக்கவோ, உடலை பராமரிக்கவோ நேரம் ஒதுக்குவதில்லை. வேலை வேலை என்று ஓடும் நம்மிடம், அந்த வேலையை செய்வதற்கான ஆற்றலோ, சக்தியோ முழு நாளும் இருப்பதில்லை. அலுவலகம் முடித்து வந்தவுடன், காலனி ஒரு பக்கம், பை ஒரு பக்கம் என வீசி, ஓய்வெடுக்க செல்கிறோம். இதிலும் கொடுமை என்னவென்றால் அந்த ஓய்வும் கூட பெண்கள் எடுக்க முடியாமல் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும்.
இதோ வந்தது தீர்வு! சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாக இருக்க தமிழ் மருத்துவம் கூறும் மூலிகையைப் பார்ப்போம். இதனை தினமும் எடுத்தால் நிகழும் அதிசயத்தை நீங்களே பார்க்கலாம், இது உங்களை முழு நாளும் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.
அனைத்து பிரச்சனைக்கும் அஸ்வகந்தா !
இது மிகவும் பிரபலமாக அறியப்பட்ட அடாப்டோஜெனிக் மூலிகைகளில் ஒன்றாகும். அஸ்வகந்தாவை தமிழில் அமுக்கிரா கிழங்கு என்பர். இரவு தூங்க செல்வதற்கு முன்பாக அஸ்வகந்தாவை பாலில் கலந்து குடிக்க வேண்டும். இது மன அழுத்த ஹார்மோனான கார்டிஸோலின் அளவைக் குறைத்து நிம்மதியான தூக்கத்தையும், உடலுக்கு தேவையான ஆற்றலையும் தருகிறது. இதனால் முழு நாளும் சுறுசுறுப்பாக இருக்கலாம். மேலும் பல வியக்க வைக்கும் நன்மைகளும் அஸ்வகந்தாவில் உள்ளது.
30 வயதிற்கு மேற்பட்டவரா? இது உங்களுக்குதான்!
30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதனை பயன்படுத்தினால் மூட்டு வீக்கம், மூட்டு வலி போன்றவை உடனடியாக குறைகிறது என்று ஆய்வில் உறுதிசெய்தனர். கீழ் வாதம் மற்றும் செரிமான அமைப்பின் பாதிப்பிற்கு பீட்டா செல்களின் ஏற்றத்தாழ்வே காரணம். அஸ்வகந்தாவிர்க்கு பீட்டா சக்தியினை அதிகரிக்கும் ஆற்றல் இயற்கையாகவே உண்டு.
ஜலதோஷம் தொல்லை ! இனிஇல்லை !
அடிக்கடி ஜலதோஷம் தொல்லையா? சிறிது அஸ்வகந்தாவை தேனீருடன் சேர்த்துக் குடித்து வந்தால் ஜலதோஷம் நிங்கும். அஸ்வகந்தா உடன் “மைடேக் காளான் சாறு” சேர்த்து சாப்பிட்டால் நோய் தொற்றிலிருந்து நம்மை காத்து கொள்ளலாம்.
முகஅழகு வேணுமா இதோவழி !
அஸ்வகந்தா மெலனின் இழப்பிலிருந்து முடியை பாதுகாத்து முடி வேர்களை பலப்படுத்துகிறது. இதனால் முடி உதிர்தல் பிரச்சனை குறைந்து முடி நீளமாக வளர்கிறது. இதோடு மட்டுமில்லாது தூக்கம் இன்மை, நீரிழிவு நோய், தைராய்டு போன்ற பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கிறது.