சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டியில் உள்ள மத்திய சிறை சாலை கைதிகளுக்கு கணினி பயிற்சி முதல் பல்வேறு வகையான தொழிற்பயிற்சிகள் வரை வழங்கும் பணி தொடங்கப்பட்டது. Photoshop, Scanning, Printing, MS- Word, MS- Excel, MS- PPT போன்ற அடிப்படை கணிணி பயிற்சிகள், ஆர்வமுள்ள மற்றும் நன்னடத்தை சிறைவாசிகளுக்கு அளிக்கப்படுகிறது. சிறை பயணம் முடிந்து செல்லும் சிறை கைதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இக்கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதனோடு மட்டுமல்லாமல் வருகின்ற காலங்களில் பிரபல கணினி பயிற்சி நிறுவனத்தின் மூலம் டிப்ளமோ பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது.
மேலும் “பிரிசன் பஜார்” என்ற பெயரில் சேலம் மத்திய சிறைசாலை கைதிகளின் மூலம் பிரட், பிஸ்கட், காரா சேவ், முறுக்கு, மிச்சர் போன்ற உணவு பொருட்கள் தயார் செய்யப்பட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.