விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரிசு – மின் கட்டணம் உயர்வு

கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள தமிழக மின்சார வாரியம் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 சதவீதம் அளவிற்கு கட்டணங்களை உயர்த்தியது. அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு ஜூலை ஒன்றாம் தேதி கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு 2.18 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது .

இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் காரணமாக மின் கட்டண உயர்வு அறிவிக்கப்படவில்லை. கட்டணங்கள் உயரும் என்று தகவல்கள் வெளியான போதும் அது மறுக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென ஜூலை 1 முதல் 4.83 சதவீதம் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக மின்சார ஒழுங்குமுறை வாரியம் அறிவித்துள்ளது.

புதிய கட்டண விகிதங்களின்படி 1 முதல் 400 வரையிலான ஒவ்வொரு யூனிட்டுக்கும் 20 காசுகளும், 401 முதல் 500 யூனிட்டுகளுக்கு தலா 30 காசுகளும், 501 முதல் 600 யூனிட்டுகளுக்கு தலா 40 காசுகளும், 601 முதல் 800 யூனிட்டுகளுக்கு தலா 45 காசுகளும், 801 முதல் 1000 யூனிட்டுகளுக்கு தலா 50 காசுகளும், 1000 யூனிட்டுகளுக்கு மேல் ஒவ்வொரு யூனிட்டிற்கும் 55 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்து விட்டாலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காரணமாக கட்டண உயர்வு அறிவிப்பு நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது, இந்த அறிவிப்பின் மூலம் உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் 2.47 கோடி வீட்டு மின் நுகர்வோர் உள்ளனர். இவர்களில் ஒரு கோடி நுகர்வோர் 400 யூனிட்டிற்கும் குறைவான மின்சாரமே பயன்படுத்துவதால் அவர்களுக்கு அதிகபட்சமாக மாதம் 25 ரூபாய் கூடுதலாக செலவாகும் என்று TANGEDCO தெரிவித்துள்ளது.

மின்சார கட்டண உயர்வினால் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வாடகை வீடுகளில் பொதுவான கட்டணங்கள் உயரும். மேலும் பல துறை சார்ந்த பொருட்களின் விலைகளும் கணிசமான அளவு அதிகமாகும் என்பதால் நடுத்தர மக்கள் விழிபிதுங்கி உள்ளனர். மின்சார வாரியம் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வீடுகளைத் தொடர்ந்து வணிகப் பயன்பாட்டிற்கான மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. 50 கிலோவாட்டிற்கு மேல் பயன்படுத்துவதற்கு ஒரு யூனிட்டிற்கு 45 காசுகளும், ஒரு கிலோவாட்டிற்கான வாடகை ரூபாய் 307 ல் இருந்து 322 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

c

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்