பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் சேலம் மாணவி மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து அசத்தல்
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள நடுவனேரியை சேர்ந்த மாணவி ராவணி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 586 மதிப்பெண்கள் பெற்று பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்திருந்தார்.
அரசு பள்ளியில் பயின்ற மாணவ மாணவியருக்கு தமிழக அரசு ஏழரை சதவீத இட ஒதுக்கீட்டின்படி மாணவி ராவணி தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
விசைத்தறி தொழிலாளியின் மகளான ராவணி, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஊக்கத்தினால் தான் இத்தனை மதிப்பெண்கள் பெற முடிந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தார் . முதலிடம் பிடித்த ராவணியை நேரில் வரவழைத்து சேலம் மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.