நாடு முழுவதிலும் மே மாதம் ஐந்தாம் தேதி நடைபெற்ற மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் 23.33 லட்சம் பேர் தேர் எழுதினர். தமிழகத்தில் 1.52 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
https:// www.nta.ac.in என்ற இணைய பக்கத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் . நீட் தேர்வில் மொத்தம் 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 720 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்களை எடுத்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை 8 மாணவர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளனர் . அதிக மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றதால் கட் ஆப் மதிப்பெண்களும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.