1969ல் இரண்டரை கோடி, இப்போதோ 1200 கோடி
பிரம்மாண்டமாக எடுக்கப்படும் சினிமாக்கள் ஆயிரம் கோடி ஆயிரத்து 500 கோடி வசூல் என்று விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது . ஆனால் விளம்பரங்கள் ஏதும் இன்றி 1960களில் நம் தமிழ் சினிமாவில் வந்த ஒரு திரைக் காவியம் இன்றைய மதிப்பில் 1200 கோடி வசூலித்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா! அது என்ன படம் ?
பாகுபலி , கே ஜி எஃப், ஆர் ஆர் என பான் இந்தியா படங்கள் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்குகளில் வசூலானதாக சொல்லப்பட்டு வருகிறது. நம் தமிழகத்தில் 1960 களிலேயே அந்த தொகைக்கு நிகரான தொகை வசூல் ஆகியுள்ளது. மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நடித்த அடிமைப்பெண் திரைப்படம் தான் அது.
தமிழ் திரை உலகில் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் எம்ஜிஆர் அவர்கள். 1969 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அசோகன் உள்ளிட்டோரின் நடிப்பில் கே சங்கர் இயக்கிய திரைப்படம் தான் அடிமைப்பெண். ஆர் எம் வீரப்பன் திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
கே வி மகாதேவன் அவர்களின் திசையில் ஆயிரம் நிலவே வா, அம்மா என்றால் அன்பு, தாயில்லாமல் நானில்லை போன்ற மெகாஹிட் பாடல்கள் இதில் இடம் பெற்றிருந்தன.
குறிப்பாக எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் பாடகராக முதன் முதலில் அறிமுகமானது இந்த திரைப்படத்தில் தான். அந்த காலகட்டத்திலேயே இந்த திரைப்படம் இரண்டு கோடியே 50 லட்சம் ரூபாய் வசூலித்தது. இன்றைய மதிப்பில் அது 1200 கோடி ரூபாய் .
50 லட்சம் பட்ஜெட்டில் உருவான அடிமைப்பெண் திரைப்படத்தை காண அன்றைய டிக்கட் விலையில் ஒவ்வொருவரும் செலவு செய்தது 30 பைசாவில் இருந்து ஒரு ரூபாய் வரையில். தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் சுமார் 375 நாட்களுக்கு மேல் ஓடி மிகப் பெரிய வெற்றியை பெற்றது அடிமைப்பெண் திரைப்படம்