செயற்கை நுண்ணறிவில் மாணவர்களின் ஆர்வம் – வளர்ச்சியா..?அழிவா…?

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் கால மாற்றத்திற்கு ஏற்றார் போல ஒவ்வொரு துறை மீதும் மாணவர்களுக்கு மிகுந்த ஆர்வம் இருக்கும் . சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தகவல் தொழில்நுட்பத் துறை மீது ஆர்வம் இருந்தது. அதன் பிறகு பொறியியல், மருத்துவம் என பல துறைகளில் மாறி மாறி மாணவர்கள் சேர்ந்து வந்தனர் . ஒரு காலத்தில் வளம் பெற்று இருந்த துறைகள் மாணவர்களின் ஆர்வமின்மையால் இன்று இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது.

இந்த ஆண்டு மாணவர்களின் பார்வை செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பக்கம் திரும்பி உள்ளது இந்த பாடங்களில் சேர அதிக அளவில் மாணவர்கள் விரும்புவதாகவும் சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள் தற்போது AI பட்டதாரி மாணவர்களை தேடி வருவதால் மாணவர்கள் இதனை படிக்க ஆர்வம் காட்டி வருகின்றன.

AI தொழில்நுட்ப பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பெரிய நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த தொழில்நுட்பம் தற்போது செல்போன் செயலிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பம் , சட்டம், நிதி மேலாண்மை, தொலைதொடர்பு என அனைத்து துறைகளிலும் இந்த தொழில்நுட்பம் அபரிமிதமாக பயன்படுத்தப்படும்.

இயந்திரங்களால் மனித உதவியுடன் பல்வேறு செயல்பாடுகளை செய்யக்கூடிய நுண்ணறிவுதான் செயற்கை நுண்ணறிவு. இயந்திரங்கள் கற்கவும் சிக்கல்களை தீர்க்கவும் விஷயங்களை திட்டமிடவும். சிந்திக்கவும் முடியும். காட்சி உணர்தல், பேச்சு அங்கீகாரம் , முடிவு எடுத்தல் மற்றும் மொழிகளுக்கு இடையில் மொழிபெயர்ப்பு என செயற்கை நுண்ணறிவு எண்ணற்ற விதங்களில் பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவத்துறையில் மனிதர்களின் மேற்பார்வை இன்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல், தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அறுவை சிகிச்சைகள் செய்தல் போன்றவை இந்த தொழில்நுட்பத்தால் முடியும். தொழிற்சாலைகளில் இயந்திர மனிதனை பயன்படுத்தி மனித உழைப்பையும் நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும். கல்வித் துறையில் மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக புதுமையான வழிகளை கொண்டு வர முடியும். விவசாயம் , வங்கி ,உடல் பாதுகாப்பு என அனைத்திலும் வரும் காலத்தில் AI பயன்பாடு அதிகரிக்கும். புதுமையான தொழில்நுட்பத்தின் எதிர்காலமாக இதனை கருதலாம் .

தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் செயற்கை நுண் அறிவு படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவதால் பொறியியல் பாடங்களில் தங்களது முதல் விருப்பமாக தேர்வு செய்து வருகின்றனர். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவுதான் எல்லாம் என்றாகும்போது அதற்காக வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற எண்ணமே இதற்கு காரணம் .

வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கருதப்பட்டாலும் மற்ற துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளை இது குறைத்து விடும் என்பதை மறுப்பதற்கு இல்லை. அதற்கேற்றார் போல் இன்று பல துறைகளிலும் ஆட்குறைப்பு நடைமுறைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. ஒரு தொழில்நுட்பம் வளர்ந்தால் அது மற்ற துறைகளை பாதிக்காமல் இருக்காது என்பது காலம் காலமாக பார்த்து வருவதுதான். ஆனால் இத்தனை வேலை வாய்ப்புகளை பறிக்கும் வகையில் இந்த துறை செயல்படுவது வெவ்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதனை படித்து வரும் இளைஞர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாகவே தெரிகிறது. இந்த துறை வளரும்போது மற்ற துறைகளுக்கான மேற்கண்ட படிப்புகளும் மதிப்பு குன்றிவிடும் என்பதையும் ஏற்க முடியாது.

செயற்கை நுண்ணறிவு மனித குல வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் அந்த தொழில் நுட்பத்தை நாம் பயனுள்ளதாக வைத்திருக்கும் வரை மட்டுமே.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்