தமிழில் 8 பேர் மட்டும்தான் தேர்ச்சி
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு பொதுத்தேர்வில் கிட்டத்தட்ட 8 லட்ச மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் 91.55% சதவீதம் தேர்ச்சி பதிவாகி இருக்கிறது.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் சமூக அறிவியலில் 4,428, அறிவியலில் 5,104, கணிதத்தில் 20,691 மற்றும் ஆங்கிலத்தில் 415 என 100% சதவீத தேர்ச்சியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை உள்ளது. ஆனால் தமிழ் பாடத்தில் 8 பேர் மட்டுமே 100% சதவீத தேர்ச்சியடைந்து உள்ளனர்.
இதற்கு என்ன காரணம் என்று சில தமிழ் ஆசிரியர்களிடம் கேட்கையில் அவர்கள் கூறியதாவது:
மற்ற பாடங்களை வைத்து ஒப்பிட்டு பார்க்கையில் தமிழ் விடைத்தாள்களை திருத்தும் போது எப்போதுமே அதில் எழுத்து பிழைகள், இலக்கிய பிழைகள் பார்ப்பது உண்டு. இது போன்ற பிழைகளை காரணமாய் கொண்டே அறை மதிப்பெண் ஆனாலும் குறைக்க வாய்ப்பு உண்டு. அந்த வகையில் கூட மாணவர்களின் 100 சதவீத மதிப்பெண் இல்லாமல் போயிருக்கலாம்.
இன்னும் முக்கியமான விஷயம் என்னவென்றால் எப்பொழுதுமே மற்ற பாடத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தமிழ் பாடத்திறக்கு கொடுக்கப் படுவதில்லை,
ஏனெனில் சம காலத்தில் மாணவர்கள் உடைய அடுத்த கட்ட கல்விக்கு கணிதம், அறிவியல் போன்ற பாடங்களுக்கான முக்கியத்துவம் அதிகம் இருப்பதால் இம்மாதிரியான பாடங்களுக்கு மட்டுமே ஆசிரியர்களும் சரி மாணவர்களும் சரி தனி கவனம் செலுத்தி வருகின்றனர். மற்ற பட்ட படிப்பு போல தமிழின் மதிப்பெண்ணை தமிழ் பிரிவில் மாணவர்கள் எடுப்பது இல்லை.
எந்த கல்லூரியானாலும் தமிழில் ஆர்வம் உண்டு என்றால் அந்த மாணவர் தேர்ச்சி பெற்றால் மட்டுமே போதுமானதாய் இருக்கிறது. இந்த காரணத்தாலும் தமிழ் பாடத்தின் மேல் உள்ள அலட்சிய போக்கு நீடித்த வண்ணம் உள்ளன.
இதை சரி செய்ய வேண்டுமானால் ஆசிரியர்கள் மற்ற பாடங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போல தமிழ் பாடத்திற்கும் சேர்த்து கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களுக்கு புரியும் படியும் விரும்பி படிக்கும் படியாகவும் பாடம் நடத்த முன்வர வேண்டும். இதை
அரசாங்கமும் தன் கவனத்திற்கு கொண்டு வந்து தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டும்தான் ஆசிரியர்களும் தமிழை முக்கிய பாடமாக எண்ணி அதற்கு ஏற்றவாறு செயல்பட தொடங்குவார்கள்.
அதுவும் இந்த சில ஆண்டுகளாக தான் தமிழ் பாடத்தில் 100 சதவீத மதிப்பெண் அளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.