கண்ணுக்கு எதிரிலேயே அமிர்தத்தை வச்சிக்கிட்டு வெயில சமாளிக்க என்னென்னத்தையோ தேடிட்டு இருக்கோம். நாங்க சொல்ல வர்றது பழைய சோறு தாங்க.
இத தேவாமிர்தம்னு சொல்லலாம். நம்மளோட உணவே மருந்து, மருந்தே உணவுன்ற கோட்பாட்ட நம்மள மறக்கடிச்சு அவங்களோட சாப்பாட்டை நம்ம மேல திணிச்ச வெளிநாட்டுக்காரங்க, இப்போ பழைய சோறோட அருமையை தெரிஞ்சுக்கிட்டு அதை பயன்படுத்திக்கிட்டு வராங்க.
ஆனா நாம தான் அதை இன்னும் ஒதுக்கிக்கிட்டு இருக்கோம் . பழைய சோறோட அருமை என்ன பார்க்கலாமா?
ஒண்ணுமே இல்லைங்க, முந்தின நாள் றீந்த சாதத்துல தண்ணி ஊத்தி வச்சு மறுநாள் காலையில சாப்பிடணும் அவ்வளவுதான்.
இது அருமையான சத்தான காலை உணவு. பழைய சோறு சாப்பிடுறதால உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குது , வெள்ளை அணுக்கள் அதிகரிக்குது , உடல் சோர்வை போக்குது, உடம்புல இருக்குற அணுச்சிதைவுகளை தடுக்குது, முக்கியமா வெயில் காலத்துல வர்ற உடல் சூட்டை தணிக்குது, நம்ம வயித்துல இருக்குற பழைய கழிவுகளை உடனடியா வெளியேத்துது, உடம்பை சுறுசுறுப்பாக இருக்க வைக்குது, வெயில் காலம் மட்டுமில்ல எல்லா காலத்துக்கும் ஏத்தது நம்மளோட பழைய சோறு.
இனியாச்சும் இதை சாப்பிட தொடங்கலாமா