பேட்டரி வாகனங்கள் பயன்படுத்துவோரா நீங்கள்?
வெயில் காலம்ன்றதால எந்த வாகனமாக இருந்தாலும் வெயில்ல நிறுத்தும் போது சூடு ஏறி நம்மையும் சூடு ஏத்துது. குறிப்பாக சில நேரங்களில் சாலைகள்ல போகும்போது திடீர்னு சில வாகனங்கள் எரிகிற சம்பவங்களும் நடக்குது.
இந்த தொகுப்புல எலக்ட்ரிக் வாகனங்களை பாதுகாக்கிற வழிமுறைகளை பத்தி பார்ப்போம்
- பொதுவாவே எலக்ட்ரிக் வாகனங்களை வெயில்ல நிறுத்தக்கூடாது. நிழல்ல நிறுத்தி வைக்கிறதுதான் சிறந்தது.
- சார்ஜ் போடும்போது அருகாமையில் வேற வாகனங்கள் எதுவும் இல்லாம பாத்துக்கணும்.
- அதே போல எரியுற தன்மை உள்ள பொருட்களும் பக்கத்துல இருக்க கூடாது.
- குறிப்பா சார்ஜ் போடும்போது முன்னெச்சரிக்கையா தீயணைப்பு கருவி, மணல், தண்ணீர் நிரப்பின பக்கெட்டுகளை பக்கத்துல வச்சுக்கோங்க.
- வண்டி வாங்கும் போது கண்டிப்பா உபயோகிப்பாளர் வழிகாட்டி கொடுத்திருப்பாங்க. அத கட்டாயம் பின்பற்றுங்க.
- வாகனத்தை அதிக வேகத்தில் இயக்கி வந்தா கண்டிப்பா சீக்கிரமாக ரிப்பேர் ஆகும். இதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
- முடிந்தவரை இரவுல சார்ஜ் போடாதீங்க. ஒருவேளை போடறதா இருந்தா உங்க கவனம் அது மேலேயே தான் இருக்கணும்
- வாகனத்தோட காப்பீடு காலாவதியாகாம பாத்துக்கோங்க
- வீட்டில் வாகன நிறுத்தும் இடத்தில் தீயணைப்பு துறையோட தொலைபேசி எண்ண எழுதி வச்சு க்கோங்க
- இந்த விதிமுறைகளை கையாண்டிங்கன்னா நிச்சயம் உங்களுடைய எலக்ட்ரிக் வாகனம் ஷாக் அடிக்கிற மாதிரி இல்லாம உங்களை சந்தோஷமா பயணிக்க வைக்கும்.