காலை நேரம் கொல்லையில் கொள்ளு, உளுந்து, பச்சை பயிறு விளையும் ஒத்தையடி பாதையில் நடந்து செல்லும் இருவர் உரையாடலை கவனிப்போம்.
நடக்கும் போது இருவரில் ஒருவருக்கு காலில் முள் குத்திவிட்டது. நடக்க முடியாமல் தடுமாற்றத்துடன நொண்டி நொண்டி நடந்தார். அதற்கு இரண்டாம் நண்பர்
ஏனய்யா …இப்படி நொண்டி நொண்டி நடக்கிறீர்
என்று கேட்டதற்கு முதல் நண்பர் இப்படிச் சொன்னார்.
முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்? – என்று சொன்னார்.
அதற்கு இரண்டாம் நண்பர் இவ்விதமாக பதில் கூறினார்
பத்துரதன் புத்திரனின்
மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் கால் வாங்கி தேய்..!
-கால் சரியாகிவிடும் என்றார்.
இதனைக் கேட்ட முதல் நண்பர்
ஓ அப்படியா…சரி அப்படியே செய்கிறேன் என்று மறுமொழி சொல்லி அப்படியே செய்தவுடன் கால் நன்றாகி இருவரும் நடந்துப்போனார்கள்.
அவர்களுடன் நடந்துச்சென்றுக்கொண்டிருந்த நமக்கும் ஒன்றும் புரியவில்லை.
சரி ….அவர்களிடமே கேட்போம் என்று விசாரித்தோம்.. அவர்கள் கூறிய விளக்கத்தை கேட்டவுடன்
அப்படியே நான் ஷாக்காயிட்டேன் …..
முக்கால் என்பது – கைத்தடி.
மூவிரண்டு என்பது 6 – ஆறு.
ஐந்து தலை நாகம் என்றால் – நெருஞ்சி முள்.
கைத்தடி எடுத்துக் கொண்டு ஆற்றுப் பக்கம் போகையில் நெருஞ்சி முள் குத்திவிட்டது என்பது இதன் பொருள்
அப்ப… இதற்கு என்ன பொருள்…
பத்து ரதன் என்றால் – தசரதன்
புத்திரன் என்றால் மகன் – தசரதனின் மகன் ராமன்
மித்திரன் என்றால் நண்பன் – ராமனின் நண்பன் சுக்ரீவன்
சத்துரு என்றால் பகைவன் – அதாவது சுக்ரீவனின் பகைவன் வாலி
பத்தினி என்றால் வாலியின் மனைவி தாரை
கால் வாங்கி தேய் என்றாள் – தாரை – தாரையின் கால் என்றால் அதன் துணைக்கால் நீக்கினால் “தரை” என்பதாகும்
பாதத்தை தரையில் தேய் குணமாகிவிடும் என்பது இதன் பொருள்.
அப்புறம் என்ன ….. இருவரும் அருகில் இருந்த வேப்ப மரத்தின் நிழலில் அமர்ந்து தாம் கொண்டு வந்திருந்த கட்டுச்சோற்றைப் பகிர்ந்து உண்டு இளைப்பாரிச் சென்றனர். கூடவேபோன நமக்கும் கட்டுச்சோற்றிலிருந்து பகிர்ந்துக் கொடுத்தாங்க…
பெருசுங்க குசும்பு என்பது இதுதானோ……
எவ்வளவு அழகாக நகைச்சுவைச்சேர்த்து மறைப்பொருளேடு மருந்து கூறப்பட்டிருக்கிறது பாருங்கள்
இந்த நெருஞ்சி முள் கொல்லைப் பகுதியில் படர்ந்து கிடக்கும்
நடப்பவர் காலில் கொத்தாக படைபோல் ஒட்டிக்கொள்ளும் பக்குவமாய் நெருஞ்சி முள்ளைப் பிடுங்க வேண்டும்.