பாட்டுன்னாலே விதவிதமான வார்த்தைகள் , பல பொருள் தர வரிகள், இன்னும் பலவிதமான பாடல்கள் இருந்துட்டு வருது. ஆனா நம்ம இலக்கியத்துல சொல்லப்பட்டிருக்கிற பாடல்களோட சிறப்ப நாம எடுத்துக்கறது இல்ல. அப்படி நாம கவனிக்காம விட்ட ஒரு தகர வருக்க பாட்டை பத்தி இப்போ பார்க்கலாம் .
காளமேகப் புலவர் பாடின இந்த தகர வர்க்க பாட்டுல முழுவதுமே தகர வரிசை எழுத்துக்கள் தான் இருக்கும் . அதனோட பொருள் அதைவிட சிறப்பா இருக்கும்.
தாதிதூ தோதீது தத்தைத்தூ தோதாது
தூதீதூ தொத்தித்த தூததே – தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீதூ
தித்தித்த தோதித் திதி.
யாருக்கெல்லாம் இதனோட பொருள் புரிஞ்சுது ? ஒரு சதவீதம் கூட புரிஞ்சு இருக்க வாய்ப்பில்லை. இந்தப் பாடல்ல இலக்கியத்துல பரவலா இருந்து வந்த தூது பத்தி சொல்லப்பட்டிருக்கு.
தாதிதூ தோதீது அப்படின்னா அடிமைப் பெண்கள் சென்று உரைக்கும் தூது பயன்படாதது.
தத்தைதூது ஓதாது – கிளியோ போய் தூது உரைக்க மாட்டாது.
தூதி தூது தொத்தித்த தூததே – தோழியின் தூதானது நாளை கடத்திக் கொண்டே போகும் தூதாய் இருக்கும் .
தேதுதித்த தொத்து தீது – தெய்வத்தை வழிபட்டு தொடர்தலும் பயனற்றதாம் (அதனால்)
தூதொத்த துத்தி தத்தாதே — பூந்தாதி தினை போன்ற தேமல்கள் என்மேல் படர்ந்து மிகாது.
தித்தித்தது ஓதித் திதி- எனக்கு இனிமையானதான என் காதலனின் பெயரையே நான் ஓதிக்கொண்டிருப்பேனாக.
தமிழுக்கு இப்படிப்பட்ட வெளியில் சொல்லப்படாத சிறப்புகளும் இருக்குது