நம்ம சேலத்துல இப்படி ஒரு பூங்காவா..!!

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் மாற்றுத் திறன் கொண்ட சிறுவர்களுக்கான விளையாட்டுச் சாதனங்கள் உள்பட சிறுவர்களுக்கான புதிய விளையாட்டு சாதனங்கள் நிறுவப்பட்டு உள்ளன.

சேலத்தை அடுத்த குரும்பப்பட்டியில் சேர்வராயன் மலையின் அடிவாரத்தில் வனத்துறை சார்பில் 78 ஏக்கரில் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது.


இங்கு புள்ளி மான், கடமான், நரி, குரங்கு, முதலை, ஆமை, மயில், மலைப்பாம்பு, வெளிநாட்டு நீர் பறவைகள் உள்பட 22 வகையான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.


கோடை வாழிடமான ஏற்காட்டை ஒட்டி இந்த உயிரியல் பூங்கா அமைந்துள்ளதால், இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
சிறு பூங்காவாக இருந்த இந்த உயிரியல் பூங்காவில் புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்கு களையும் பராமரிக்கும் நடுத்தர பூங்காவாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. பூங்காவில் சிறுவர்களுக்கான வளாகத்தை மேம் படுத்தும் பணிகளும் நடை பெற்று முடிந்துள்ளது. இதில் சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் விளையாட்டு சாதனங்கள், மாற்றுத் திறன் கொண்ட சிறுவர்கள், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே சுற்றக்கூடிய ராட்டினம் போன்ற சாதனம் மற்றும் சில சிறப்பு சாதனங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
பூங்கா நுழைவு வாயிலில் ‘ஐ லவ் குரும்பப்பட்டி ஜூ’(I Love Kurumbapatti Zoo) என்ற வாசகம் கொண்ட செல்ஃபி பாயின்ட் (Selfie Point) அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவுக்கு வருபவர்கள் நுழைவுக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வசதியாக, ‘க்யூ ஆர் கோடு’(QR Code) வசதியும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது

இதனிடையே, கோடை காலம் தொடங்கி விட்டதால், வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் மான் குரங்கு மயில் பறவைகள் உள்ள பகுதிகளில் குளிர் நீர் தெளிப்பான்கள் அமைக்கப்பட்டு உள்ளன

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்