சேலம் னாலே சட்டுனு நினைவுக்கு வருவது மாம்பழம்தான். அத்தனை சிறப்பு வாய்ந்த மாம்பழங்களோட வரத்து கோடை காலம் தொடங்கி இருக்கிறதால நகர் முழுவதும் அதிகரிச்சிட்டு இருக்கு. இந்த மாம்பழத்தோட வரலாற சின்னதா பார்ப்போமா.
நமக்கு தெரிஞ்ச மாம்பழங்களோட வகை ஒரு சிலது தான் . ஆனால் சுமார் ஆயிரம் வகை மாம்பழங்கள் உலகம் முழுக்க இருக்கு. கோடை வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க மாம்பழங்களோட சுவையும் அதிகமாகும்ன்றது வியப்பான விஷயம்.
கிரிக்கெட் பந்து சைஸ்ல ஆரம்பிச்சு தர்பூசணி சைஸ் வரைக்கும் வகைவகையான மாம்பழங்கள் இருக்கு. அஸ்ஸாம் காடுகளிலும், மியான்மர் நாட்டோட காடுகள்ளயும்தான் முதன் முதலா மாம்பழங்கள் உருவாகி இருக்கும்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. விட்டமின் ஏ பி டி இருக்கிற மாம்பழங்க, சுவையை தாண்டி அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியதா நம்ம மக்கள் நம்பறாங்க. அதனாலதான் வீட்டு விசேஷங்கள் அப்போ வீட்டு வாசல்கல்ல பச்ச பசேல் இருக்கிற மாவிலை தோரணங்கள் கட்டறாங்க.
மாம்பழத்தோட சுவையில மயங்கி இந்தியா வந்த போர்த்துக்கீசியருங்க உலகம் முழுக்க அதனை ஏற்றுமதி பண்ணாங்க அவங்க உருவாக்கின பழங்கள் தான் நாக்குல எச்சில் ஊற வைக்கிற மல்கோவா, அல்போன்சா பழங்கள்.
வெயில் அதிகரித்திருக்கிறதால அதிக அளவுல மாம்பழங்கள் வந்திருந்தாலும் சில வியாபாரிகளோட குறுக்கு வழி சிந்தனையில செயற்கை முறையில பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களா சந்தையில வித்துக்கிட்டு தான் இருக்காங்க அதெல்லாம் உடம்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கொண்டு மக்கள் விழிப்போடு இருந்து இயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை வாங்கி சாப்பிட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கணும்