1000 பள்ளி வாகனங்கள் நிராகரிப்பு…

தமிழகத்தில் மொத்தம் 37,788 பள்ளி கல்லூரி வாகனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றை ஆண்டுக்கு ஒரு முறை போக்குவரத்து துறை உள்ளிட்ட உயர்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம் .இந்த ஆண்டு இதுவரை 70 சதவீதம் ஆய்வுகள் முடிவு பெற்றுள்ளன.

அவசரகால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள், முதலுதவிப் பெட்டி, பிரேக் செயல்பாடு, ஓட்டுநர்களின் பார்வை திறன், வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 16 அம்ச பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தியதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தகுதிச் சான்று நிராகரிக்கப்பட்டது.

இந்த அம்சங்கள் சரி செய்த பிறகு அவற்றுக்கு சான்று வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளிகள் திறக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மீதமுள்ள 30 சதவீத வாகனங்களும் முழு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்