வேறு என்னதான் சாப்பிடறது…

மோர், இளநீர் நுங்கு என வெயிலுக்கு இதை சாப்பிடு, அதை சாப்பிடு என்று சொல்வதுண்டு. ஆனால் கோடை வெயிலுக்கு எதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்று தெரியுமா ? தெரிந்து கொள்வோம் இப்போது.

நமது உடல் 70 சதவீதத்திற்கும் மேல் நீரால் ஆனது . இதனால் எப்போதுமே நீர்ச்சத்து உணவுகளை தான் நாம் சாப்பிட வேண்டும். நீச்சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் .

முதலில் இந்த கோடையில் உப்பு , காரம் கலந்த நொறுக்குத் தீனிகளை அறவே தவிர்க்க வேண்டும். ருசியாக இருந்தாலும் உடலுக்கு கேடு தருபவை இந்த நொறுக்கு தீனிக்கள் .

வெயில் வந்து விட்டால் மது பிரியர்கள் குளிர்ச்சியாக கிடைக்கும் மதுப்பொருட்களை அருந்துவர். ஆனால் இதுவும் தவறு . எந்த வகை ஆல்கஹாலாக இருந்தாலும் சரி , அது உடலில் நீர்ச்சத்து குறைபாட்டையும் திரவ இழப்பையும் ஏற்படுத்தும். ஆல்கஹாலுக்கு இணையான டையூரிடிக் பண்புகள் இருப்பதால் காபி டீ சோடாவையும் தவிர்க்க வேண்டும்.

பதப்படுத்தி விற்கப்படும் இறைச்சிக்களை வாங்காதீர்கள் , அதில் அதிக அளவு ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால் புதிதாக வெட்டப்படும் இறைச்சிகளையே வாங்க வேண்டும் .

காரம் அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. அதிக காரம் எடுத்துக் கொண்டால் நெஞ்செரிச்சல் , வாயு கோளாறு ஏற்படும். இதனாலேயே சாப்பிட்டதும் அதிக தாகம் ஏற்படும்.

சர்க்கரை சேர்த்த உணவுகளை எப்போதுமே அதிக அளவில் எடுத்துக் கொள்ளக் கூடாது. மிட்டாய் , சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் ஆகியவை இரத்த சர்க்கரை அளவை உயர்த்துவதுடன் நீர் சத்து குறைவையும் உண்டாக்கும்.

எண்ணெயில் வறுத்த மற்றும் பொறித்த உணவுகளையும் முழுவதுமாய் தவிர்க்க வேண்டும் . இவை உடலில் கொழுப்பை அதிகரிப்பதோடு நீர்ச்சத்து குறைவையும் உண்டாக்கும். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பிஸ்கட்டுகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

இறுதியாக சில பழங்களையும் கோடையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. வாழைப்பழம் , உலர் திராட்சை இவைகளில் சர்க்கரை அதிகம் உள்ளது . ஆகவே இவற்றையும் அதிகமாக சாப்பிடக்கூடாது .

சேலம் மக்களே நமது ஊரில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகமாகிக் கொண்டே வருகிறது . வெயிலுக்கு இதமாக இயற்கை பானங்களை அருந்துவதை போல் கோடையில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்களையும் முற்றிலும் தவிர்ப்போம். உடல் நலனை பாதுகாப்போம்.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்