வெள்ளி கொலுசு மணி…

சேலம் மாவட்டத்தில் முக்கிய தொழிலாக வெள்ளி கொலுசு தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது.

சேலத்தில் குகை, செவ்வாய்ப்பேட்டை, இளம்பிள்ளை, ஆண்டிப்பட்டி, பனங்காடு, தாதகாப்பட்டி, சிவதாபுரம் உள்ளிட்ட சுமார் 60 க்கும் மேற்பட்ட பகுதிகளில் வெள்ளி கொலுசு தயாரிக்கும் பணி அதிகளவில் நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளிப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன.

ஒரு கொலுசு தயாரிக்க சுமார் 20க்கும் மேற்பட்ட பல்வேறுபட்ட தொழிலாளர்கள் தங்களின் உழைப்பை தரவேண்டி உள்ளது. சுமார் 2லட்சம் தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வளிக்கும் தொழிலாக உள்ளது.

இங்கு தயாரிக்கப்படும் வெள்ளி கொலுசுகள் அண்டை மாநிலங்களான ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பிஹார், ஜார்கன்ட், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

அதோடு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதனை குடிசை தொழிலாக, வீடுகளில் இருந்தே அரைஞாண்கயிறு, மெட்டி உள்ளிட்டவைகளை தயாரிக்கின்றனர்.

இந்த வெள்ளி கொலுசுக்கள் பல்வேறு வடிவங்கள் மற்றும் ரகங்களில் தயாரிக்கப்படுகிறது. பார்ப்பதற்கு பளபளப்பாகவும், காண்போரின் கண்களை கவரும் வகையிலும் அழகான வடிவில் தயாரிக்கப்படுவதால் சேலத்தில் தயாரிக்கப்படும் கொலுசுகளுக்கு நாடு முழுவதும் நல்ல கிராக்கியும் வரவேற்பும் வாடிக்கையாளர்களிடம் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் ஒவ்வொறு கொலுசுகளின் ரகம் மற்றும் அதன் வடிவங்களுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

வேற்று மாநில மற்றும் மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள்கூட குறிப்பாக தங்க, வெள்ளி நகை கடைக்காரர்கள், சேலம் வெள்ளி நகை உற்பத்தியாளர்களிடம் தங்கள் நகைகளை கொடுத்து, அதற்கு மாற்றாக பிரத்யேகமான முறையில், கொலுசு, அரைஅரைஞாண்கயிறு, மெட்டி உள்ளிட்ட ஆபரணங்களை கலைநயத்துடன் வடிவமைத்து தரச்சொல்லி வாங்கிச்செல்கின்றனர்.

ஒரு கொலுசு முழு வடிவம் பெற 16 நிலைகளை தாண்ட வேண்டி உள்ளது. கம்பி மிஷின், உருக்குக்கடை, மிஷின் பாலிசி, கைமெருகுகடை, பூ மிஷின், பொத்துகுண்டு வளையம் மிஷின், அரும்பு மிஷின், குஷ்பூ பட்டறை, எஸ்.செயின், சாவித்ரி சலங்கை, பட்டை மிஷின், குப்பாமிஷின், கெட்டி பூ மிஷின், பொடிமிஷின், கன்னிமாட்டும் மிஷின், லூஸ் பட்டறை. ஒவ்வொறு கட்டத்திலும் மெருகேற்றப்பட்டு கொலுசு முழுவடிவம் பெற 2 முதல் 3 நாட்கள் வரை ஆகும்

இன்றைய நிலையில் வெள்ளி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராம் ஒன்றுக்கு 1.50₹ 5உயர்ந்து 90₹ ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் சுமார் 2லட்சம் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பது இந்த கொலுசு தயாரிக்கும் தொழில் என்பது குறிப்பிடத்தக்கது,

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்