சேலத்தில் வெயில் மழை என மாறி மாறி வரும் நிலையில் தண்ணீரை எப்போதும் காய்ச்சி குடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஏன் தண்ணீரை காய்ச்சிய பிறகு குடிக்க வேண்டும்? அதனால் என்ன நன்மை?
விரிவாக பார்க்கலாம்.
பருவநிலை மாறும் போது ஏற்படும் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து உடனடியாக விடுபட தேவை வெந்நீர் தான். இதய ஆரோக்கியத்திற்கும் வெந்நீர் சாதகமான விளைவையே கொண்டுள்ளது. ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும் முதலில் தேவைப்படுவது வெந்நீர்தான். ரத்த ஓட்டம் நன்கு இருந்தால் ரத்த அழுத்தம் சாதாரண அளவிலேயே இருக்கும்.
ரத்த அழுத்தத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு. ரத்த அழுத்தம் சீராக இருந்தால் இதயம் நன்றாக இருக்கும். இதயம் தொடர்பான நோய்களின் அபாயம் குறையும்.
உடல் எடையை கணிசமாக குறைக்க வெந்நீர் மட்டுமே போதும். சூடான தண்ணீரை குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும் செய்முறையை தொடங்குகிறது. இதனால் வளர்ச்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது. இது உடல் பருமன் ஏற்படாமல் காக்கிறது.
மொத்தத்தில் சூடான நீரை குடிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நல்ல விளைவையே கொண்டுள்ளது .
ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல வெந்நீரை அதிகமாக குடித்தால் அது உணவுக் குழாயில் உள்ள நல்ல திசுக்களை சேதப்படுத்தி , சுவை மொட்டுக்களை கெடுத்து, நாக்கில் பல பிரச்சனைகளை உண்டாக்கும்.
எனவே தொடர்ந்து வெந்நீரை குடிக்க விரும்பினால் அதை சிறிது சிறிதாக சீரான அளவில் மட்டுமே அருந்துவது சிறந்தது.